ஹிஷாம்: பெர்சே மீதான அமைச்சின் நிலை ஒரே மாதிரியாகவே உள்ளது

எந்தத் தரப்புக்கள் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தாலும் அதனைக் கையாளுவதில் உள்துறை அமைச்சு ஒரே மாதிரியான கொள்கையையே பின்பற்றுவதாக அதன் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார். பொதுப் பாதுகாப்புக்குத் தமது அமைச்சு எப்போதும் முன்னுரிமை கொடுத்து வருவதாக அவர் சொன்னார். ஆகஸ்ட் 31ம் தேதி மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களின் போது…

முன்னாள் சிஐடி தலைவர்: பெர்சே மீதான பிரதமர் கருத்து ஆதாரமற்றது

பெர்சே 3.0 பேரணி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சி என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக் கொள்வது "மேலோட்டமானது, ஆதாரமற்றது" என முன்னாள் புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் பாவ்சி ஷாரி கூறியிருக்கிறார். நஜிப் நம்ப முடியாத தகவல் அடிப்படையில் அந்த எண்ணத்தை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும் என…

பெர்சே பேரணியில் போலீசை சீண்டிவிட்டவர்கள் சில இளைஞர்கள்

ஏப்ரல் 28-இல், பெர்சே பேரணியில் சாதாரண உடை அணிந்திருந்த மூன்று நான்கு இளைஞர்கள், போலீசாருக்கு சினமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) நடத்தும் பொதுவிசாரணையில் இன்று கூறப்பட்டது. பொது விசாரணையில் 14-வது சாட்சியாக சாட்சியமளித்த சுற்றுப்பயண வழிகாட்டியான கரம் சிங்,அந்த மூன்றுநான்கு பேரும் ஜாலான் துவாங்கு அப்துல்…

அரசு பெர்சேயைத் தீயதாகக் காண்பிக்க முயல வேண்டாம்

பெர்சே ஒரு சட்டவிரோத அமைப்பல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் அதைத் தீயதாக உருவகித்துக் காட்டுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி வலியுறுத்தியுள்ளார். “சட்ட அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.பிஎன் குற்றச்சாட்டுகளால் பெர்சே பற்றி நிலவிய தப்பெண்ணங்களையெல்லாம் மூட்டை கட்டி வைக்க வேண்டும்”, என்று பாஸ்…

சாட்சிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டு ஹனிப் ஏமாற்றம்

ஏப்ரல்28 பெர்சே 3.0 பேரணி குறித்து விசாரணை நடத்தும் சிறப்புக் குழுவிடம் சாட்சியம் அளிக்க வருவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது அக்குழுவின் தலைவர் ஹனிப் ஒமாருக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது. “வன்செயல்கள் நிகழ்ந்ததாக பலரும் கூறுகிறார்கள்.ஆனால், சாட்சியம் அளிக்க முன்வருவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏமாற்றம் தருகிறது”, என்று…

போலீஸ் முரட்டுத்தனம் மீது ஹனீப் சாதுவாக இருப்பதாக பெர்சே சாடியுள்ளது

தேர்தல் சீர்திருத்தங்கள் கோரி ஏப்ரல் 28ம் தேதி நடத்தப்பட்ட பேரணியின் போது போலீஸ்காரர்கள் தொழில் ரீதியாக நடந்து கொள்ளவில்லை என ஹனீப் குழு தெரிவித்துள்ள கருத்தை பெர்சே சாடியுள்ளது. அந்த பேரணியின் போது போலீசார் காட்டிய முரட்டுத்தனத்தைக் கருத்தில் கொண்டால் அந்தக் கருத்து "நலிவான பதில்" என அது…

ஒதுங்கியிருங்கள் என இமாம்களுக்கு பிரதமர் நஜிப் ஆலோசனை

பெர்சே கூட்டங்கள் சேதங்களை ஏற்படுத்துவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். அதனால் அத்தகைய நடவடிக்கைகளில் சம்பந்தப்பட வேண்டாம் என இமாம்களையும் பள்ளிவாசல் குழு உறுப்பினர்களையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று செர்டாங்கில் நாடு முழுவதையும் சேர்ந்த இமாம்களும் பள்ளிவாசல் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ள கூட்டத்தில்…

கோலாலம்பூர் பேரணியில் அரசதந்திரிகள் பங்கு கொள்ளவில்லை என்கிறது சிங்கப்பூர்

தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி ஏப்ரல் மாதம் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட மாபெரும் பேரணியில் சிங்கப்பூர் அரசதந்திரிகள் கலந்து கொண்டதாக மலேசியா பழி சுமத்துவதை அந்த நகர நாடு நிராகரித்துள்ளது. அதன் வெளியுறவு அமைச்சர் கே சண்முகம் நாடாளுமன்றத்தில் இன்று அதனைத் தெரிவித்தார். அந்த ஏப்ரல் பேரணியில் "பாரபட்சமற்ற பார்வையாளர்களாக" மற்ற…

PDRM – the armed division of Umno

S.Thayaparan, May2, 2012 "I hate victims who respect their executioners" - Jean-Paul Sartre "Policemen so cherish their status as keepers of the peace and protectors of the public that they have occasionally been known to…

டிபிகேஎல், டத்தாரானை 48 மணி நேரத்துக்கு மூடுகிறது

டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நாளை காலை 6.00 மணி தொடக்கம் 48 மணி நேரத்துக்கு டத்தாரான் மெர்தேக்காவை மூடுகிறது. 1992ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்ற (டத்தாரான் மெர்தேக்கா) (கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம்)துணைச் சட்டங்கள், 1976ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்றச் சட்டத்தின் 65வது பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில்…

பெர்சே பேரணி மீது யூபிஎம் விதித்த தடையை Pro-Mahasiswa அமைப்பு…

பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்களின் கீழ் கூடுதல் சுதந்திரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்படுள்ள போதிலும் யூபிஎம்  என்ற மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் சனிக்கிழமை நிகழும் பெர்சே 3.0 பேரணியில் தனது மாணவர்கள் பங்கு கொள்வதற்குத் தடை விதித்துள்ளது. அந்தப் பல்கலைக்கழகத் தங்கும் விடுதிகளுக்கான…

BERSIH 2.0’s Response to DBKL and PDRM

Yesterday, endorsing NGOs of the Coalition for Clean and Fair Elections 2.0 (BERSIH 2.0) had an emergency meeting and unanimously decided to proceed with the BERSIH 3.0 “Duduk Bantah” in Dataran Merdeka. The emergency meeting…

பெர்சே: திருத்தங்கள் மோசடிகளைத் தடுக்கும் பாதுகாப்பு வலயங்களை நீக்குகின்றன

மக்களவை இன்று அதிகாலையில் நிறைவேற்றியுள்ள தேர்தல் குற்றங்கள் சட்டத் திருத்தங்கள் மோசடிகளைத் தடுக்கும் பாதுகாப்பு வலயங்களை நீக்குகின்றன. இவ்வாறு தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே அமைப்பு கூறுகின்றது. நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் மக்களவை ஏற்றுக் கொண்ட அந்தத் திருத்தங்கள் சுயேச்சையாகக் இயங்கும் தேர்தல் முகவர்களுடைய பங்கைப் பெரிதும்…

பெர்சே பேரணிக்கு மெர்தேக்கா சதுக்கத்தில் இடமில்லை என்கிறது டிபிகேஎல்

கோலாலம்பூரில் உள்ள மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி தனது குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்தும் பெர்சே திட்டத்தை டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நிராகரித்துள்ளது. இன்று காலை மணி 11.00 அளவில் டிபிகேஎல்-லிடமிருந்து பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினரான மரியா சின் அப்துல்லாவுக்கு அந்த நிராகரிப்புக் கடிதம்…

அம்பிகா: டாத்தாரான் மெர்தேக்கா மக்களுக்குச் சொந்தமானது

டத்தாரான் மெர்தேக்கா மக்களுடையது. அது கோலாலம்பூர் மாநகர்மன்றத்திற்கு (DBKL) சொந்தமானதல்ல என்று பெர்சே கூறுகிறது. டத்தாரான் மெர்தேக்க ஒரு பாரம்பரியச் சொத்து. முன்மொழியப்பட்டுள்ள கூட்டம் அங்கு நடந்தால், அது அதற்கு சேதத்தை உண்டுபண்ணக்கூடும் என்ற கருத்திற்கு பதில் அளித்த பெர்சேயின் தலைவர் அம்பிகா சீனிவாசன் அது ஒரு பொதுவான…

பெர்சே 3.0 பேரணி நடத்தப்படும்!

அடுத்த பேரணி கோலாலம்பூரில் உள்ள மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என பெர்சே 2.0 குழு அறிவித்துள்ளது. பெர்சே 3.0  என அழைக்கப்படும் அந்தப் பேரணியின் கருப்பொருள் Duduk Bantah (குந்தியிருப்பு ஆட்சேபம்) என்பதாகும். அந்த விவரங்களை பெர்சே 2.0 அமைப்பின்…

நஸ்ரி: பெர்சே 3.0 தெருப் பேரணி நடத்தினால், விளைவை அனுபவிக்க…

தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே அமைப்பு, மீண்டும் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம்  செய்தால் அதன் விளைவை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று நடப்பில் சட்ட அமைச்சர் நஸ்ரி அசீஸ் எச்சரித்துள்ளார். “தெருவில் ஆர்ப்பாட்டம் செய்தால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் நஸ்ரி இவ்வாறு தெரிவித்தார். …

மக்களைப் பிணையாக பிடித்து வைத்திருப்பது அரசாங்கமே, பெர்சே அல்ல

தேர்தல் சீர்திருத்தம் கோரி தூய்மையான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் அமைப்பான பெர்சே 2.0 சமர்பித்த எட்டுக் கோரிக்கைகளும் "நியாயமற்றவை" அல்ல என அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். பெர்சே 2.0 பரிந்துரைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுமானால் மூன்றாவது சுற்றுப் எதிர்ப்புப் பேரணி நடத்தப்படலாம் என்றும் அவர் ஏற்கனவே கோடி…

Najib endorsed threats against me, says Ambiga

[- S.Pathmavathy, Jan 18, 2012] Bersih 2.0 chairperson Ambiga Sreenevasan has accused the prime minister of "endorsing" threats against her in the run-up to the public rally for electoral reform on July 9 last year.…

பெர்சே விசாரணை: “போலீஸ், மாது ஒருவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது”

பெர்சே 2.0 பேரணி தொடர்பான பொது விசாரணை தொடங்கியுள்ளது. ஜாலான் துன் சம்பந்தனில் பல தனிநபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் போலீசார் மாது ஒருவரை முரட்டுத்தனமாக தரையில் தள்ளியதை தாம் பார்த்ததாக சாட்சி ஒருவர் கூறியிருக்கிறார். கென்னத் சான் வென் சின் என அடையாளம் கூறப்பட்ட அவர், விசாரணையை…

தொழில்நுட்பக் குறைகளைச் சரிசெய்க, பெர்சே

தேர்தல் சீரமைப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி), சீரமைப்புகளை ஆராய்வதுடன் தேர்தல் ஆணைய(இசி)த்திலும் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி)யிலும் ஏற்படும் தொழில்நுட்பக் குறைகளுக்குத் தீர்வு காணவும் முயல வேண்டும். இவை கவலை தருவதாக  பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் ஏ.சுப்ரமணியம் பிள்ளை இன்று கூறினார். மாற்றரசுக் கட்சியும்…

பெர்சே 2.0 பேரணியில் போலீஸ் அடக்குமுறை மீதான புலனாய்வு முடிக்கப்பட்டுள்ளது

பெர்சே 2.0 பேரணியின் போது போலீசார் அடக்குமுறையை கையாண்டதாக கூறப்படுவது மீது புலனாய்வு முற்றுப் பெற்றுள்ளது. அது தொடர்பான அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார். அந்தப் புலனாய்வு மீது தேசியப் போலீஸ் படைத் தலைவர் இரண்டு முறை தமக்கு…

அனைத்து தேர்தல் சீர்திருத்தங்களும் உடனடியாக அமலாக்கப்படவேண்டும், அம்பிகா

எல்லாத் தரப்புக்களும் ஒப்புக்கொண்ட அனைத்து தேர்தல் சீர்திருத்தங்களும் உடனடியாக அதுவும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்பட வேண்டும் என பெர்சே 2.0 அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். விரைவில் அமைக்கப்படவிருக்கும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு விவாதித்து முடிவு செய்த பின்னரே பரிந்துரைக்கப்படும் அனைத்து சீர்திருத்தங்களும் அமலாக்கப்படும்…