மக்களவை இன்று அதிகாலையில் நிறைவேற்றியுள்ள தேர்தல் குற்றங்கள் சட்டத் திருத்தங்கள் மோசடிகளைத் தடுக்கும் பாதுகாப்பு வலயங்களை நீக்குகின்றன.
இவ்வாறு தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே அமைப்பு கூறுகின்றது.
நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் மக்களவை ஏற்றுக் கொண்ட அந்தத் திருத்தங்கள் சுயேச்சையாகக் இயங்கும் தேர்தல் முகவர்களுடைய பங்கைப் பெரிதும் குறைத்துள்ளன.
வாக்களிப்பையும் வாக்குகள் எண்ணப்படுவதையும் பார்வையிடுவதற்கு தேர்தல் முகவர்கள் எப்போது நுழைய வேண்டும் என்று கூட இனிமேல் வரையறுக்க முடியும் என பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினரான மரியா சின் அப்துல்லா கூறினார்.
வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் கூட வாக்குகளை எண்ணுதற்கான முகவர்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடும்.”
“அது நாங்கள் எண்ணியதைப் போல இருக்காது என்பதை நம்புவோம். ஆனால் அது நடக்கக் கூடும்,” என மரியா சின் கூறினார்.