கோலாலம்பூரில் உள்ள மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி தனது குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்தும் பெர்சே திட்டத்தை டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நிராகரித்துள்ளது.
இன்று காலை மணி 11.00 அளவில் டிபிகேஎல்-லிடமிருந்து பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினரான மரியா சின் அப்துல்லாவுக்கு அந்த நிராகரிப்புக் கடிதம் கிடைத்ததாக அந்தக் கூட்டமைப்பு தெரிவித்தது.
அந்த நிகழ்வு சதுக்கத்தில் நிகழ்வதற்கு பொருத்தமானது அல்ல என்று அதில் டிபிகேஎல் தெரிவித்துள்ளது.
கொண்டாட்டங்கள் போன்ற “தேசிய நிகழ்வுகளுக்கு” மட்டுமே அந்த இடத்தை பயன்படுத்த முடியும் என்றும் மாநகராட்சி மன்றம் அதில் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் குந்தியிருப்பு போராட்டம் “மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாததால் பாதுகாப்பு மருட்டல் அல்ல” என நேற்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் ஒர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.