DBKL “ஒத்துழைக்கவில்லை”, ஆனாலும் அன்வாருக்கு உற்சாகமான வரவேற்பு

நேற்றிரவு பிரிக்பீல்ட்ஸில் பிகேஆரின் தீபாவளி நிகழ்வுக்கு அதிகாரிகளால் பல இடையூறுகள். ஆனாலும், அந்நிகழ்வுக்கு  வருகை புரிந்த பிகேஆர் நடப்பில் தலைவருக்கு உற்சாகமான வரவேற்பு காத்திருந்தது. 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விடாமல் பெய்த மழையிலும் இரவு மணி 9.30வரை காத்திருந்து அன்வாரை வரவேற்றனர். ஜெலஜா மெர்டேகா ரக்யாட் பேருந்தில் அன்வார்…

உள்நாட்டு வணிகர்கள் அனுமதிகளை அந்நியர்களுக்கு ‘வாடகைக்கு’ விடக் கூடாது

கோலாலம்பூர் மாநகராட்சியில் உள்நாட்டு வணிகர்களிடமிருந்து வாடகைக்கு பெற்ற அனுமதிகளை அந்நியர்கள் பயன்படுத்தும் காலம் விரைவில் முடிவுக்கு வரும். சௌக்கிட்-டில் உள்ள ஜாலான் ராஜா போட் சந்தைக் கூடம் உட்பட பல இடங்களில் இயங்கும் அத்தகைய அந்நியர்களைப் பிடிப்பதற்கு போலீஸ், குடிநுழைவுத் துறை ஆகியவற்றைன் ஒத்துழைப்புடன் மாநகராட்சி மன்றம் சோதனைகளில்…

ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயில் உடைப்பு நோட்டீஸை DBKL உடனடியாகத்…

கோலாலம்பூர், ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயிலை உடைப்பதற்காக கோலாலம்பூர் மாநகர் மன்றம் வழங்கிய நோட்டீஸை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அம்மன்றம் கோயில் நிருவாகக் குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் இன்று பின்னேரத்தில் அறிவித்தது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன்…

ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயில் உடைப்பு: DBKL பின்வாங்கியது

கோலாலம்பூர் ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீவரர் காளியம்மன் கோயில் அக்டோபர் 25 ஆம் தேதி வாக்கில் உடைக்கப்படும் என்று கோயில் நிருவாகத்திற்கு அனுப்பியிருந்த நோட்டீஸை திரும்பப் பெற்றுக்கொள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL) இன்று ஒப்புக்கொண்டது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) கடந்த செப்டெம்பர் மாதம்…

கோலாலம்பூர் ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் கோயிலை உடைக்க DBKL…

கோலாலம்பூர் ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் 100 ஆண்டுகால ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயிலை உடைப்பதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் கோயில் நிருவாகத்தினருக்கு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி இம்மாதம் 24 ஆம் தேதி வாக்கில் கோயில் உடைக்கப்படவிருக்கிறது. DBKL-லின் கோயில்…

டிபிகேஎல் கேமராக்களில் பெரும்பாலானவை பழுதடைந்தவை

கோலாலம்பூரில் போக்குவரத்தைக் கண்காணிக்க ரிம 366 மில்லியன் செலவில் பொருத்தப்பட்ட கேமராக்களில் பாதிக்கு மேற்பட்டவை சரியாக வேலை செய்வதில்லை என்று 2011 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது. போக்குவரத்து நிலவரத்தைக் கண்காணிக்க 255 சிசிடிவி கேமராக்களும் விபத்துகளைக் கண்டதும் தானாகவே தகவல் சொல்ல 728 கேமராக்களும் பொருத்தப்பட்டன. இந்த…

இந்திய கலாச்சார அலங்காரத்துக்கு DBKL தடை: பிரதமர் விளக்கம் அளிக்க…

மலேசிய இந்து சங்கம் ஆகம முறையிலான ஆலய வழிபாட்டுக்குரிய வழிகாட்டுதலை அனைத்து ஆலயங்களுக்கும் வழங்கிட தேசிய இந்து ஆலய மாநாட்டை அண்மையில் தலைநகர், செராசில் உள்ள DBKL மண்டபத்தில் நடத்தியது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 800 ஆலயப் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மண்டப வாடகைக்கு 4,660 ரிங்கிட்டும்,…

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக டிபிகேஎல்-க்கும் போலீசாருக்கும் அம்பிகா நன்றி கூறுகிறார்

பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், தமது வீட்டுக்கு வெளியில் கடைகளை அமைப்பதற்கு பெர்சே எதிர்ப்பாளர்கள் போட்ட குறியீடுகளை சாயம் பூசி அழித்த கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்) அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். அத்துடன் அந்த அதிகாரிகளும் போலீசாரும் தொடர்ந்து அங்கு இருந்து வருகின்றனர். "டிபிகேஎல் அதிகாரிகள்…

அனுமதி இல்லை என்கிறது டிபிகேஎல்; கடை போடுவோம் என்கிறார்கள் வியாபாரிகள்

வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வீட்டின் முன்புறம் கடை போட 60 சிறுவியாபாரிகளுக்கு அனுமதி அளிக்க கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) மறுத்துவிட்டது. ஆனால், கோலாலம்பூர் சிறுவியாபாரிகள் செயல் மன்றத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், அம்பிகாவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் நடவடிக்கை திட்டப்படி நடக்கும் என்றார்.…

அம்பிகா: கடைசி நேரத்தில் மாற்று இடம் ஏன்?

திட்டமிடப்பட்டுள்ள பெர்சே 3.0 குந்தியிருப்பு போராட்டம் தொடங்க இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே இருக்கையில், கடைசி நேரத்தில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேல்) வழங்க முன்வந்துள்ள மெர்தேக்கா அரங்கத்தை ஏற்றுக்கொள்ள தேர்தல் சீர்திருத்தம் கோரும் குழுவான பெர்சே மறுத்து விட்டது. எதிர்வரும் சனிக்கிழமை பெர்சே பேரணி டத்தாரான் மெர்தேக்காவில்…

டிபிகேஎல்: அரசியல், எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மெர்தேக்கா சதுக்கம் இடம் அல்ல

பெர்சே-யில் அரசியல், எதிர்ப்புச் சக்திகள் அடங்கியிருப்பதால் அது மெர்தேக்கா சதுக்கத்தில் தனது பேரணியை நடத்த முடியாது என கோலாலம்பூர் மாநகர மேயர் புவாட் அகமட் இஸ்மாயில் கூறுகிறார். செராமாக்களை நடத்த விரும்புவது, அரசியல் சக்திகளை அல்லது எதிர்ப்புச் சக்திகளைக் கொண்டிருப்பது ஆகியவை போன்ற தன்மைகளைக் கொண்ட நடவடிக்கைகளை நிராகரிப்பது…

பெர்சே பேரணிக்கு மெர்தேக்கா சதுக்கத்தில் இடமில்லை என்கிறது டிபிகேஎல்

கோலாலம்பூரில் உள்ள மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி தனது குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்தும் பெர்சே திட்டத்தை டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நிராகரித்துள்ளது. இன்று காலை மணி 11.00 அளவில் டிபிகேஎல்-லிடமிருந்து பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினரான மரியா சின் அப்துல்லாவுக்கு அந்த நிராகரிப்புக் கடிதம்…

டிபிகேஎல்: பொதுப்பணம் அமைச்சர் நிகழ்வுக்குச் செலவிடப்படவில்லை

கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம்(டிபிகேஎல்), குடியிருப்பாளர் சங்கங்களுக்கு(ஆர்ஏ) ஒதுக்கப்பட்ட பணத்தை எடுத்து கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் சைனல் அபிடின் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தியதில்லை. இதனை, நேற்று மலேசியாகினிக்கு அனுப்பிய அறிக்கையொன்றில் வலியுறுத்திய டிபிகேஎல்,லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்(வலம்) சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில்…