டிபிகேஎல்: அரசியல், எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மெர்தேக்கா சதுக்கம் இடம் அல்ல

பெர்சே-யில் அரசியல், எதிர்ப்புச் சக்திகள் அடங்கியிருப்பதால் அது மெர்தேக்கா சதுக்கத்தில் தனது பேரணியை நடத்த முடியாது என கோலாலம்பூர் மாநகர மேயர் புவாட் அகமட் இஸ்மாயில் கூறுகிறார்.

செராமாக்களை நடத்த விரும்புவது, அரசியல் சக்திகளை அல்லது எதிர்ப்புச் சக்திகளைக் கொண்டிருப்பது ஆகியவை போன்ற தன்மைகளைக் கொண்ட நடவடிக்கைகளை நிராகரிப்பது என்னும் டிபிகேஎல் (கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்) கொள்கைக்கு இணங்க நாங்கள் மெர்தேக்கா சதுக்கத்தைப் பெர்சே பயன்படுத்துவதை நிராகரித்தோம் என வலியுறுத்த விரும்புகிறோம்,” என அவர் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

மெர்தேக்கா சதுக்கத்தில் தனது பேரணியை நடத்துவதற்கு பெர்சே விடுத்த வேண்டுகோளை கடந்த வாரம் டிபிகேஎல் நிராகரித்தது. அதற்கு பெர்சே பேரணி தேசிய நிகவு அல்ல என அது காரணம் கூறியது.

என்றாலும் ஒரு தனியார் நிறுவனமான நெஸ்லே தனது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களை அது தேசிய நிகழ்வாக இல்லாத போது மார்ச் 19ம் தேதி அந்தச் சதுக்கத்தில் எப்படி நடத்த முடிந்தது என பெர்சே கேள்வி எழுப்பியது.

TAGS: