எந்தத் தரப்புக்கள் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தாலும் அதனைக் கையாளுவதில் உள்துறை அமைச்சு ஒரே மாதிரியான கொள்கையையே பின்பற்றுவதாக அதன் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார்.
பொதுப் பாதுகாப்புக்குத் தமது அமைச்சு எப்போதும் முன்னுரிமை கொடுத்து வருவதாக அவர் சொன்னார்.
ஆகஸ்ட் 31ம் தேதி மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களின் போது அதே நேரத்தில் பெர்சே கூட்டத்தை நடத்துவதற்கான திட்டம் பற்றி கருத்துரைத்த போது அவர் அவ்வாறு சொன்னார்.
அந்தக் கூட்டத்துக்கான நோக்கம் கேள்விக்குரியது எனக் குறிப்பிட்ட ஹிஷாமுடின், அந்த நிகழ்வு அமைதியாக நடக்கும் என்ற தங்கள் வாக்குறுதியை ஏற்பாட்டாளர்கள் காப்பாற்றுவார்களா என்பதே முக்கிய விஷயமாகும் என்றார்.
“நான் அதனைத் தேசியப் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். அத்தகைய நிகழ்வுகள் வாக்குறுதி அளிக்கப்பட்டது போல நிகழாது என்பதற்கு பெர்சே 3.0 ஒரு படிப்பினையாகும். அது நான் முடிவு செய்யும் விஷயமல்ல.”
ஹிஷாமுடின் நேற்று புத்ராஜெயாவில் அமைச்சின் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
ஏற்பாட்டாளர்கள் வழக்கமான நடைமுறைகள் வழியாகச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது என்றும் அவர்கள் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தின் அனுமதியைக் கோர வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் சொன்னார்.
பெர்னாமா