நன்னெறிக் கல்விப் பாடத்துக்கான எஸ்பிஎம் சோதனைத் தேர்வு வினாத்தாளில் இடம் பெற்றிருந்த பெர்சே 3.0 மீதான கேள்வி ஜோகூர் கல்வித் துறை வழங்கிய வழிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது என சிகாமாட்டில் உள்ள SMK Seri Jementah பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் விளக்கமளித்துள்ளார்.
“ஆறாவது கேள்வி பெர்சே சட்ட விரோதக் கூட்டம் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என Jadual Spesifikasi Item (JSI) (அட்டவணைக் குறிப்புக்கள்) தெரிவித்தன. அதனால் நாங்கள் அதனைப் பின்பற்றினோம்,” என தலைமை ஆசிரியையான ஜானிசா சைனோன் சொன்னார்.
அந்தச் சோதனைத் தேர்வு வினாத்தாள் தமது பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததை அவர் உறுதிப்படுத்தினார். முன்னதாக அந்த வினாத்தாளின் படத்தை மலேசியாகினி அவருக்கு அனுப்பியது.
“ஆம். அது எங்கள் பள்ளிக்கூடத்திலிருந்து தான் வந்தது. ஆனால் இதில் சரியோ தவறோ என ஒன்றுமில்லை. நாங்கள் Jadual Spesifikasi Item (JSI)-ஐ பின்பற்றினோம்.”
இப்போது அது ஒரு பிரச்னையாகி விட்டது. எனக்கு குற்ற உணர்வு ஏற்படுகின்றது. ஆனால் நாங்கள் உத்தரவுகளையே பின்பற்றினோம்,” என்றார் அவர்.
சட்ட விரோதக் கூட்டம் மீது சில பள்ளிக்கூடங்கள் வாசகங்கள் வடிவத்தில் கேள்வியை கொடுத்திருந்தன. ஆனால் நாங்கள் மாணவர்களுக்கு தெளிவாக இருப்பதற்காக பெர்சே பேரணி படம் ஒன்றையும் இனைத்தோம்,”