போக்குவரத்துத் துறை அமைச்சர் லோக் சியூ ஃபூக், இது சரக்குந்து மற்றும் தளவாடத் துறைகளில் நிலவும் ஓட்டுநர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் என்று கூறுகிறார்.
இராணுவ முன்னாள் வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் தங்களின் கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களை (Heavy Vehicle Driving Licences), ‘கிளாஸ் E’ (Class E) உரிமங்களாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் சிறப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான வகுப்பு E (Class E) உரிமங்களைப் பெறுவதற்கு உதவும் வகையில், அரசாங்கம் ஒரு சிறப்பு உரிமத் திட்டத்தைத் தொடங்க உள்ளது.
போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் கூறுகையில், ராணுவத்தில் ஏற்கனவே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கும் ஓய்வுபெற்ற வீரர்கள், அவற்றை வகுப்பு E உரிமங்களாக மாற்றிக்கொள்ள இந்த முயற்சி அனுமதிக்கும் என்றார்.
போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் (Haulage and logistics) நிலவும் கனரக வாகன ஓட்டுநர்களின் பற்றாக்குறையைப் போக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும் அவர் கூறினார். மேலும், 40-களில் ஓய்வுபெறும் பல ராணுவ வீரர்கள் இன்னும் ஆரோக்கியமாகவும், லாரிகள் உட்பட கனரக வாகனங்களை ஓட்டும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“முன்னாள் வீரர்கள் ஒழுக்கமானவர்கள், மனவுறுதி மிக்கவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் என்பதால், பல நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று போர்ட் கிள்ளான் ஆணையத்தின் (PKA) கூடுதல் கட்டிடத் திறப்பு விழாவில் லோக் தெரிவித்தார்.
“இந்த முன்னெடுப்பு திறமையாகவும் விரைவாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறிய அவர், இந்தத் திட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் ஒத்துழைப்பு நல்குமாறு தளவாட (Logistics) நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஓய்வு பெற்ற பிறகு வீரர்கள் சிவில் பணிகளுக்கு மாறுவதற்கு உதவும் வகையில், சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) ஏற்கனவே ஆயுதப்படை வீரர் விவகாரத் துறையுடன் இணைந்து ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
























