பெர்சே: பெர்சே 4.0 பேரணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை

1 bersihபெர்சே 4.0 பேரணியை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுவதைத் தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் பெர்சே 2.0 அமைப்பு மறுத்துள்ளது.

பேரணி ஏற்பாடு செய்யும் நோக்கம் எதுவும் தங்களுக்கு இல்லை என பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் வொங் சின் ஹுவாட்(கீழே) மலாய் மெயில் நாளேட்டிடம் கூறினார். அதற்குப் பதிலாக அந்த அமைப்பு பொதுத் தேர்தலின்போது நிகழ்ந்த முறைகேடுகளை விசாரிக்க மக்கள் மன்றம் அமைப்பதில் கவனம் செலுத்தும் என்றாரவர்.

1 bersih1“பெர்சே 2.0-இல் உள்ள எங்களைப் பொறுத்தவரை இது (பெர்சே 4.0) ஒரு சமூக இயக்கம். அது ஏற்பாடு செய்யும் பேரணியில் கலந்துகொள்வதா இல்லையா என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளலாம்”, என்றவர் சொன்னார்.

பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள், பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா போன்றோர்  அப்பேரணியை  ஏற்பாடு செய்கிறார்கள்.

மே 13-இல், ஷா ஆலமில் ஒரு செராமாவில் கலந்துகொண்ட முகம்மட், அரசாங்கம் தேர்தல் 1 bersih 2சீரமைப்புகளைச்  செய்யாவிட்டால் பாஸ் அடுத்த பெர்சே பேரணியை ஏற்பாடு செய்து அதில் கலந்துகொள்ள ஒரு மில்லியன் பேரை அழைத்து வரும் என்றார்.

பெர்சே பெயரில் பேரணி நடத்தப்படுவதில் பெர்சே 2.0-க்கு மறுப்பு ஏதுமில்லை என அதன் இயக்கக் குழுவின் இன்னொரு உறுப்பினரான மரியா சின் அப்துல்லா தெரிவித்தார்.

“பெர்சே என்ற பெயர் மக்களுக்கு உரியது. அது எங்களுக்குச் சொந்தமானது அல்ல”, என்றாரவர். அவர்கள் தங்கள் அமைப்புக்கு பெர்சே 2.0 என்ற பெயரை வைத்துக்கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  .

 

TAGS: