பயந்தாங்கொள்ளிகள்போல் ஓட்டம் பிடிக்கக்கூடாது; பெர்சே ஆண்டி ஆலோசனை

முதிய வயதிலும் பெர்சே 2.0 பேரணியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டதன் வழி பிரபலமானவர் என்னி ஊய். அவர்,1 auntie 1 நேற்றிரவு ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்துக்குமுன் மெழுகு ஏந்திய கூட்டத்தில் கூடியிருந்தவர்களுக்கு அன்பான குரலில் சில அறிவுரைகளை எடுத்துரைத்தார்.

போலீசார், கூட்டத்தைக் கலைக்க முற்பட்டால் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும் என்றாரவர்.

“நாம் கொள்ளையர்களோ, கொலைகாரர்களோ அல்லர்… போலீசார் நம்மை நோக்கி வந்தால் அமைதியாக விலகிச் செல்வோம்.

“பயந்தாங்கொள்ளிகள்போல் ஓட்டம் பிடிக்கக்கூடாது”, என்றவர் கூறியதைக் கேட்டு குழுமியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

நேற்று கைதான இரண்டு மாற்றரசுக்கட்சி அரசியல்வாதிகள், ஒரு சமூக ஆர்வலர் ஆகிய மூவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சுமார் 700 பேர் அங்கு கூடி இருந்தனர்.

1 auntie2இரவை லாக்-அப்பில் கழிக்க வேண்டி நேர்ந்தால் அதற்கும் ஆயத்தமாகவே வந்திருப்பதாகக் கூறி ஒரு பையைத் தூக்கிக் காண்பித்தார் அந்தப் பணி ஓய்வுபெற்ற ஆசிரியை. அவரது பையில் மற்றவற்றோடு பல்துலக்கியும் இருந்தது.

“போலீஸ் கைது செய்தால் லாக்-அப்பில் இருக்கவும் தயாராக இருக்க வேண்டும்”, என்றாரவர்.

1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1)-இன்கீழ் கைது செய்யப்பட்ட பத்து தொகுதி எம்பி தியான் சுவா, மனித உரிமை போராளி ஹரிஸ் இப்ராகிம், பாஸ் கட்சி உறுப்பினர் தம்ரின் கப்பார் ஆகியோருக்கு ஆதரவு தெரிவிக்க அக்கூட்டத்தினர் தாமாகவே வந்திருந்தனர்.

கூட்டத்தினர் தங்கள் ஆதரவைப் புலப்படுத்த கைகளில் மெழுகுதிரி ஏந்தி இருந்தனர்.