வெளிநாடுகளில் நாட்டின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதற்காக 6564 மலேசியர்களுடைய பாஸ்போர்ட்டுக்கள் ரத்துச் செய்யப்படும் என குடிநுழைவு தலைமை இயக்குநர் அலியாஸ் அகமட் விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் அவரைச் சந்திக்க பெர்சே விரும்புகின்றது.
அதற்காக அவருக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்றை பெர்சே அனுப்பும் என்று அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார்.
“அவர் எந்த சட்ட அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறார் என்பதை உறுதி செய்யவும் பட்டியல் பிரதியைப் பெறவும் அலியாஸைச் சந்திக்க விரும்புகிறோம்,” என அம்பிகா சொன்னார்.
“எனக்குத் தெரிந்த வரையில் குடிநுழைவு இயக்குநர் குறிப்பிட்டுள்ள குடிநுழைவுச் சட்டம், பாஸ்போர்ட்
சட்டம் ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்ட காரணங்கள் அடிப்படையில் பாஸ்போர்ட்டை ரத்துச் செய்ய
அதிகாரமில்லை.”
“ஜனநாயகம் எனக் கூறிக் கொண்டு ஐநா மனித உரிமை மன்றத்தில் உறுப்பியம் பெற்றுள்ள மலேசியா
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் தங்களது அடிப்படை பேச்சு உரிமை, ஒன்று கூடும்
சுதந்திரத்தை பயன்படுத்தியதற்காக மருட்டப்படுகின்றனரா ?” என அம்பிகா வினவினார்.
குடிநுழைவுத் துறை உள்துறை அமைச்சின் கீழ் இயங்குவதைக் குறிப்பிட்ட அந்த அமைச்சு குற்றச் செயல்கள், தடுப்புக் காவல் மரணங்கள் போன்ற முக்கியமான பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவருமான அவர் கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பதில் அமைச்சு தங்களை எண்ணங்களை வெளிப்படுத்தும் வெளிநாடுகளில் வசிக்கும்
மலேசியர்களை மருட்டுவதற்குத் தனது அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றது என்றார் அவர்.
‘தார்மீக உரிமை இல்லை’
“மாற்றுக் கருத்துக்களை நிர்வாகம் கடந்த சில வாரங்களாக ஒடுக்கி வருவதாகத் தெரிகிறது.”
“சட்டத்தை நிலை நிறுத்துவதாக அமைச்சு வலியுறுத்துவதற்கு எத்தகைய தார்மீக உரிமையும் கிடையாது.
உண்மையில் அது கொடுங்கோல் ஆட்சியை நிலை நாட்டுகின்றது,” என அம்பிகா குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் வசிக்கும் 6564 மலேசியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நாட்டின்
தோற்றத்துக்கு வெளிநாட்டில் களங்கத்தை ஏற்படுத்தியதற்காக அவர்களுடைய பாஸ்போர்ட்டுக்கள்
ரத்துச் செய்யப்படும் என்றும் கடந்த வியாழக் கிழமை அலியாஸ் அறிவித்தார்.
மலேசிய அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்டவர்களும் அந்தப் பட்டியலில்
உள்ளதாக பெரித்தா ஹரியான் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13வது பொதுத் தேர்தலில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக கூறிக் கொண்டு உலக அளவில் பல பெரிய
நகரங்களில் பெர்சே அமைப்பின் அனைத்துலகப் பிரிவான குளோபல் பெர்சே அந்த
ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மக்கள் சக்தி i iiiiiiii
தலைமை இயக்குனருக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும் போது இது போன்ற சில்லறை பிரச்சனைகளில் ஈடுபட அவருக்கு நேரம் இருக்காது! அப்படியே முடிந்தாலும் மகாதிரை கேட்டு விட்டுத் தான் உங்களை சந்திப்பார்!
காமெடியன்கள் நாட்டை வழி நடத்தினால் இப்படித்தான் இருக்கும் .
தடி எடுதவறேலாம் தண்டல் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். எந்த துறையை எடுத்துகொண்டாலும் அதிகாரிகள் பொதுமக்களை ஒரு கூளிகாரனாகவே பார்கிறார்கள், நடத்துகிறார்கள். இதில் நம்பர் ஒன் “காவல் நிலையம்” என்னமோ இவர்கள் ஜமிதார் போலவும் நாமெல்லாம் இவர்களின் அடிமைகள் போலவும் நடத்துகிறார்கள். காரணம், தலைமைத்துவத்தின் அலட்சியம், பொறுப்பின்மை, சரியான வழி காட்டல் கிடையாது. காஞ்சமாடு கம்புல விழுவதுபோல குடிமக்களிடம் அவர்களின் கோபத்தை கட்டவிழ்த்துவிடுகின்றனர். ஒருமனிதனை மனிதானகவே மதிப்பதில்லை . உயர்மட்ட அதிகாரி கீழ்மட்ட அதிகாரிகளை மதிக்க தெரியாதபோது எப்படி வெளியாட்களை மதிப்பார்கள். ஆட்டுமந்தைகள் போல் நடத்தும் போக்கு மாற நாம்தான் பாடம் புகட்டவேண்டும்?