அம்பிகா: நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திட்ட நஜிப்பை அதற்குப் பொறுப்பேற்கச் செய்வோம்

cabinetகடந்த புதன்கிழமையன்று மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்புடன் நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திட்ட நஜிப்பை அதற்குப் பொறுப்பேற்கச் செய்வோம் என பெர்சே 2.0 கூறுகின்றது.

“அந்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றுக்கும் நஜிப்பை பொறுப்பேற்கச் செய்வோம்,” என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் நேற்று கோலாலம்பூரில் கூறினார்.

அவர், நேற்று அரசமைப்பும் ஆளுமையும் என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசினார்.

“அந்த வாக்குறுதியில் கூறப்பட்டுள்ள அம்சங்களை அவர்கள் அதில் கையெழுத்திடுவதற்கு முன்னர் பின்பற்றவில்லை என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தாலும் ஏற்கனவே நிகழ்ந்ததை நாம் கவனத்தில் கொள்ள முடியாது.”

அந்தக் கருத்தரங்கின் போது ‘மலேசிய அரசமைப்பு: ஒரு சூழ்நிலை ஆய்வு’ என்ற தலைப்பில் பேராசிரியர் அண்ட்ரூ ஹார்டிங் எழுதியுள்ள புத்தகமும் வெளியீடு கண்டது.

அந்த நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திடப்பட்டுள்ளது சட்ட ரீதியாகக் கட்டுப்படுத்தாது என்றாலும் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் பொறுப்புடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும் என அம்பிகா பின்னர் நிருபர்களிடம் கூறினார்.ambiga

“அவர்கள் சட்டங்களை இயற்றப் போகும் மனிதர்கள் ஆவர்,” என்பதைக் குறிப்பிட்ட அவர், அவர்கள் அந்த வாக்குறுதியில் கையெழுத்திட்டாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் நல்ல முறையாக நடந்து கொள்வதற்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்யும்.”

தேர்தலில் போட்டியிடும் பிஎன் தலைவர்கள் கையெழுத்திட்ட அந்த நான்கு அம்ச நேர்மை வாக்குறுதி:

1) தங்கள் நடைமுறைகளில் உண்மை, நேர்மை, நெறிமுறைகள், பொறுப்பு ஆகியவற்றை பின்பற்றுவது, ஊழல்களையும் மற்ற ஊழல் நடவடிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதை அல்லது கொடுப்பதை தவிர்ப்பது.

2) மக்கள் நலனை நிலை நிறுத்தி அதற்கு முன்னுரிமை கொடுப்பது.

3) நல்ல ஆளுமையையும் வெளிப்படைப் போக்கையும் பின்பற்றுவது.

4) மலேசியாவில் அமலாக்கப்பட்ட சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றுவது.

மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பு கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அந்த வாக்குறுதிக்கு அரசியல் களத்தில் இரு புறமும் நல்ல ஆதரவு கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 222 எம்பி-க்களில் நால்வர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார்கள்.

எல்லா பிஎன் வேட்பாளர்களும் அதில் கையெழுத்திடுவதை தாம் உறுதி செய்வதாக நஜிப் கூறியிருக்கிறார். அந்த நேர்மை வாக்குறுதி கையெழுத்தான சடங்கில் பங்கு கொண்ட அமைச்சர்களில் சிலர் அதில் கையெழுத்திடவில்லை என்பதால் அது வெறும் ஆணையாக மட்டுமே இருக்க முடியும் என பலர் நம்புகின்றனர்.

TAGS: