மசீசவிடமும் மஇகாவிடமும் ஏதாவது கொஞ்சமாகிலும் இருந்தால், வெளியேற வேண்டும், அம்பிகா

Minister Zahid, Ambiga1அம்னோ அமைச்சர் என்ற முறையில் எவ்விதத் தண்டணையும் இன்றி இனவாதக் கருத்துகளைக் கூறலாம் என்ற நிலை இருப்பதால், பாரிசான் பங்காளிக் கட்சிகள் எப்படி இதனைச் சகித்துக் கொண்டு இன்னும் தொடர்ந்து அக்கூட்டணியில் இருக்கின்றன.

பாரிசானின் இரு முக்கிய கட்சிகள் தங்களுடைய சுயமரியாதை உணர்வை வலுப்படுத்த வேண்டும் என்று பெர்சே தலைவர் அம்பிகா வலியுறுத்திய போது இக்கேள்விதான் அவருடைய Minister Zahid, Ambiga2சிந்தனையில் இருந்திருக்க வேண்டும்.

உள்துறை அமைச்சரின் பேச்சைக் கேட்ட பின்னர், மசீசவும் மஇகாவும் பிஎன்னில் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று உண்மையிலேயே அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்று அவர் டிவிட்டரில் இன்று தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி மலாய் குண்டர் கும்பலுக்கு ஆதரவாக பேசியிருப்பதாக கூறப்படுவதையும், “முதலில் சுடுங்கள்” கொள்கை இருப்பதை அவர் ஒப்புக் கொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டி அம்பிகா இக்கேள்வியை எழுப்பினார்.

 

 

 

 

 

 

TAGS: