டிபிகேஎல் வழக்குரைஞர் மன்றப் பதாகைகளை அகற்றியது தப்பு

barகோலாலும்பூர்  மாநகராட்சி  மன்றம்(டிபிகேஎல்) மலேசிய  வழக்குரைஞர்  மன்றம்  தொங்க  விட்டிருந்த  பதாகைகளை  அகற்றியது  ஒரு  அத்துமீறல்,  சட்டவிரோத  செயல்  என  உயர்  நீதிமன்றம்  வழங்கிய  தீர்ப்பு  இன்று  முறையீட்டு  நீதிமன்றத்தில்  நிலைநிறுத்தப்பட்டது.

ஏழாண்டுகளுக்குமுன்  வழக்குரைஞர்  மன்றம்,  ஜாலான்  லெபோ பசாரில்  உள்ள  அதன்  கட்டிடத்தில்  அந்தப்  பதாகைகளைத் தொங்க  விட்டிருந்தது.

தீர்ப்பை  நிலைநிறுத்திய  நீதிபதி  அப்துல்  வகாப்  பட்டேய்ல்  தலைமையிலான  நீதிபதிகள்  குழு, பொது  இழப்பீடாக  ரிம12,000-மும்  சிறப்பு  இழப்பீடாக  ரிம320-உம்  வழக்குரைஞர்  மன்றத்துக்கு  வழங்க  வேண்டும்  என்பதையும்  நிலைநிறுத்தியது. வழக்குச்  செலவுகளைக்  கொடுக்க  அது  உத்தரவு  எதையும்  வெளியிடவில்லை.