சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றம் (எம்டிஇஎஸ்), இரண்டு மாதங்களாக இருந்துவரும் நீர்ப் பங்கீட்டு முறையை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. அது பற்றி இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
நேற்று, சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் தலைமையில் நடைபெற்ற எம்டிஇஎஸ் கூட்டத்தில் அம்முடிவு செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
இன்று பிற்பகல் மணி 2.30க்கு செய்தியாளர் கூட்டமொன்றில் அந்த “நல்ல செய்தி” அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், அக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டது. நாளை அது நடைபெறும்.
சுங்கை சிலாங்கூர் அணைக்கட்டில் நீரின் அளவு 50 விழுக்காட்டை எட்டவில்லை என்ற போதிலும், காலிட்டே அம்முடிவைச் செய்ததாகத் தெரிகிறது.
“சிலாங்கூர் மக்களுக்காக அம்முடிவைச் செய்வதாக காலிட் கூறினார்”, என ஒரு வட்டாரம் தெரிவித்தது.
விரைவாக முடிவு எடுக்கட்டும்.