இன்று பாஸ் பிரதிநிதிகள் பிகேஆர் மற்றும் டிஎபி தலைவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஷரியா கிரிமினல் சட்டத் தொகுப்பு II சட்டம் 1993 ஐ அமல்படுத்தும் அதன் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
பாஸ் தரப்பில் கிளந்தான் மந்திரிபுசார் அஹமட் யாக்கோப், துணை மந்திரி புசார் முகமட் நிக் அஹமட் அப்துல்லா, பாஸ் குழு உறுப்பினர்கள் டுசுல்கிப்ளி அஹமட், டாக்டர் ஹத்தா ரமலி மற்றும் கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி ஆகியோர் பங்கேற்றனர். முஸ்தாபா கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தார்.
பிகேஆர் சார்பில் உதவித் தலைவர் தியான் சுவா, தலைமைப் பொருளாளர் வில்லியம் லியோங் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் சிவராசா ராசையாவும், டிஎபியை பிரதிநிதித்து துணைத் தலைவர் தெரசா கோ மற்றும் குழு உறுப்பினர்கள் லியுவ் சின் தோங், ஸைரி கிர் ஜொஹாரி மற்றும் ஓங் கியன் மிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இரண்டு மணி நேரம் நடைபெற்ற அக்கூட்டம் கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.
கூட்டம் முடிவுற்ற பின்னர், “நாங்கள் அவர்களுக்கு அளித்த விளக்கத்திலிருந்து, எல்லாம் ஆக்கமுறையானதாகத் தெரிகிறது… கிளந்தான் அரசு செய்துள்ளதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் அக்கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. அதனை நாங்கள் மதிக்கிறோம்”, முகமட் நிக் அமர் ஹராக்காவிடம் கூறினார்.
“ஏதோ ஒரு வகையில், எங்களுடைய நிலைப்பாட்டை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். வேறுபாடுகள் இருப்பதெல்லா வழக்கமானதே. இதில் முக்கியமானது என்னவென்றால் பக்கத்தான் பங்காளிகள் ஒருவரை ஒருவர் மதிப்பதுதான்”, என்று அவர் மேலும் கூறினார்.
மசீசவுக்கும் விளக்கம் அளிக்கப்படும்
பாஸ் கட்சி பிஎன் உறுப்புக் கட்சிகளையும், மசீச உட்பட, சந்தித்து விளக்கம் அளிக்க விரும்புகிறது என்றாரவர்.
கிளந்தான் மாநில அரசின் ஹூடுட் சட்டத்தை அமலாக்கம் செய்வதற்கு தாம் பாஸ் கட்சிக்கு உதவப் போவதாக பிரதமர்துறை இலாகா அமைச்சர் ஜமில் கிர் பஹாரும் கூறியதைத் தொடர்ந்து ஹூடுட் மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது.
கிளந்தான் இயற்றியுள்ள ஹூடுட் சட்டம் திருட்டு குற்றங்களுக்கு உடலுறுப்புகளைத் துண்டித்தல் மற்றும் விபச்சாரம் போன்றவற்றுக்கு கல்லால் அடித்துக் கொல்லுதல் ஆகிய தண்டனைகளுக்கு வகை செய்கிறது.
மலாய் வாக்காளர்களுடன் மோதல்
மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் பாஸ் சிரமத்தை எதிர்பார்ப்பதாக தெரசா கோ மலேசியகினியிடம் கூறினார்.
“பாஸ் கட்சி டிஎபியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அம்னோ கிராமப்புற மக்களிடம் கூறி வருகிறது.
“ஹூடுட் சட்டம் அமலாக்கம் குறித்து அம்னோ தங்களுக்கு சவால் விடுவதால் தாங்கள் மௌனமாக இருக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர். தாங்கள் எதிர்வினையாற்றாவிட்டால், அவர்கள் இன்னும் அதிகமான வாக்குகளை இழக்க நேரிடும் என்று கருதுகின்றனர்”, என்றார் தெரசா.
பிகேஆரும் டிஎபியும் மலேசியா மற்றும் பக்கத்தான் கூட்டணியின் எதிர்காலம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பாஸிடம் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.
எது எப்படி இருப்பினும், பக்கத்தான் இவ்விவகாரத்தால் பிளவுபட்டுவிடாமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனிடையே, இக்கூட்டம் ஒரு “பொது விவாதம்” மட்டுமே என்று சிவராசா கூறினார்.
“எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”, என்று அவர் சுருக்கமாக பதில் அளித்தார்.
பாஸ் கட்சி ஐயாமார்களே, உங்களுக்கு மலாய்க்காரர்கள் ஒட்டு வங்கி முக்கியம். உண்மைதான். ஆனால் நீங்கள் சிலாங்கூரில் மற்றும் மேற்கு தீபகற்ப மலேசியாவில் இருக்கும் பல மாநிலங்களில் போட்டியிட்ட பல இடங்களில் வெற்றி பெறுவதற்கு சீனர், இந்தியர்கள் ஒட்டு தேவைப்பட்டது என்பதை மறந்தது ஏனோ?. ஒட்டு வேண்டும் என்று என்னும் பொழுது நாமெல்லாம் மக்கள் கூட்டணி என்ற பாட்டு, தேர்தல் முடிந்தவுடன் எங்கள் கட்சி நிலைப்பாட்டை மக்கள் கூட்டணியில் உள்ள மற்ற பங்காளிக் கட்சிகள் மதிக்க வேண்டும் என்ற பாட்டு! உங்கள் ஒட்டு வங்கியை மட்டும் நீங்கள் பார்த்துக் கொண்டால் மற்ற பங்காளிக் கட்சிகளின் ஒட்டு வங்கி என்னாவது?. எவனும் மறந்தும் மக்கள் கூட்டணியில் உள்ள ஜ.செ.க.-கோ அல்லது மக்கள் நீதிக் கட்சிக்கோ ஓட்டுப் போடுவானா?. ஆக்கம் கெட்ட கூவைகளா, நீங்கள் இன்று தேசிய அளவில் ஒரு மரியாதை மிக்க கட்சி என்பதே இந்த மக்கள் கூட்டணி கொடுத்த பிச்சைதான் என்பதை மறந்து பேசுகின்றீர்கள். இந்த கூட்டணி இல்லையென்றால் நீங்கள் இன்னும் அந்த கிளந்தான் மாநிலக் கட்சியாகவே இருந்திருக்க முடியும், கிணற்றுத் தவளைப் போல. கடந்த தேர்தலில் நீங்கள் கெடாவில் கவிழ்ந்தர்க்குக் காரணம் அங்குள்ள சீனர் இந்தியர்களின் ஒட்டு கணிசமான எண்ணிக்கையில் அம்னோவுக்குப் போய் சேர்ந்ததே. இதற்க்கு காரணம் முன்னால் மாநில முதல்வர் விளையாடிய ‘double game’ தான். மீண்டும் உங்களில் பசுத்தோல் போர்த்திய நரியாக இருப்பவர்களின் தந்திரத்தில் மதியிழந்து அடுத்த தேர்தலில் மகாத்தான தோல்வியைத் தழுவுவதற்கு இந்த ஹுடுத் திட்டம் வழிவகுக்கும். அதற்க்கு முன்கூட்டியே எமது அனுதாப வாழ்த்துக்கள். வாழ்க வளர்க தேசிய முன்னணி.
ஆஹா! கூட்டணி என்றால் இப்படியல்லவோ செயல்படவேண்டும். எஜம்மானனுக்கு(அம்னோ} வாலை மட்டுமே ஆட்டத் தெரிந்த இந்த இரண்டு ‘ஆள்செஷன்’ நாய்களுக்கு[ம.இ.க.,ம.சீ.ச.] இதை எப்படி புரிய வைப்பது?
பாஸ் கட்சி ஐயாமார்களே, நீங்கள் இதுநாள் வரையில் கிளந்தான் மாநிலத்தில் வெற்றிப் பெற்று வந்தது இந்த ஹுடுத் சட்ட போர்வையில் இல்லை மாறாக தோக் குருவின் தனிநபர் செல்வாக்கில். அந்த தனி நபர் செல்வாக்கும் அடுத்த தேர்தலில் செல்லாக் காசாகி விடும். அடுத்த தேர்தலில் கிளந்தானிலும் உங்களுக்கு மூன்று நாமம்தான் மிஞ்சும். அரசனை நம்பி புருசனைக் கை விட்ட கதையாகப் போகின்றது. அப்புறம் இஞ்சி தின்ன குரங்கைப் போல இளிக்கப் போகின்றீர்கள். இது உங்கள் ஊழ்வினை என்றால் யார் என்ன செய்ய முடியும். அனுபவி ராஜா, அனுபவி.
சிறந்த முறையில் விளக்கம் அளிக்கப்பட்டது. கொள்கை வேறாயினும் புரிந்துணர்வில் விரிசல் கிடையாது. இனி அம்னோ இந்த ஹூடுத் ஷரியா சட்டத்துக்கு ஆதரவு வழங்குமா என்றே பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.. ம இ காவும் (இவன்களை நம்ப முடியாது) ம சீ சாவும் ஆதரவு கரம் தூக்குகிறார்களா அல்லது வாலை சுருட்டிக்கொண்டு மௌனம் சாதிக்கிரார்களா என்று பார்ப்போம்…. சாபா சரவாக் மக்களின் முடிவும் இந்த சட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும்….!!!!! பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவது தற்பொழுது குதிரைக் கொம்பே!!!!!!
ஹுடுட் சட்டம் சாதரனாமான குடிமக்களுக்கு மட்டும்தானா?
இல்லை,பக் மந்………களுக்கும்,அவன் பெண்டாட்டிகளுக்கும், வைபட்டிகளுக்கும், மகன்,மகள்,சொந்த பந்தங்கள்,அனைவருக்கும் சமமாக தண்டனை வழங்கும் சட்டமா இருக்குமா? சிவில் சட்டம் கண் இருந்தும் குருடாய்;காதிருந்தும்செவிடாய்;வாய் இருந்தும் ஊமையாய்; எதற்கும் பயன் இல்லாமல் இருக்கிறது.இதை போல் ஹுடுட்சட்டமும் அமைந்தால் என்னவாகும் நாடு.ஒருத்தருக்கு ஒருவரை பிடித்துவிட்டாலும்,பிடிக்காவிட்டாலும் பொய் வழக்கு போட்டு தண்டணை கிடைக்க முயற்சிப்பார்கள். [உதாராணம் கற்பழிப்பு கேஸ்] இந்தா காலத்தில் பணம் கொடுத்து பொய் சாட்சி சொல்ல வைக்க முடியும்.செய்யாத குற்றத்திற்கு தண்டணை அனுபவிக்க நேரிடும்.இதனால் பலரின் உயிர்கள் கொடூரமான முறையில் உயிர்போகும்.பலர் உடல் ஊனமுற்றொராக சமுதாயதிற்கு சுமையாக வாழ நேரிடும்.பின்னோக்கி செல்லாமல் முன்னோக்கி செல்ல என்ன வழிஇருக்கு என்று சிந்தியுங்கள்.
முதலில் மலேசியா ஜனனாயக நாடா அல்லது இஸ்லாம் நாடா என்ற கேள்விக்கு பாக்காத்தானின் நிலைபாடு என்ன ?,எனக்கு பாக்காத்தான் மீது தான் சந்தேகம்,”கூடுதல் அவகாசம் தேவை”இந்த வாசகத்துக்கு அர்த்தம் என்ன.வாழ்க நாராயண நாமம்.
மலேசிய அரசியல் சாசனம் எந்த ஒரு மதச் சட்ட சார்பற்ற (“secular based”) அமைப்புடனே நிறுவப்பட்டது. படிப்படியாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப் பட்ட திருத்தம் என்ற போர்வையில் மெது மெதுவாக இஸ்லாம் சமய சட்டதிட்டம், சிவில் சட்டதிட்டத்திநூடே தனித்து விளங்கும் வகையில் திருத்தி அமைக்கப் பட்டது. இஃது இஸ்லாம் தனிநபர் சட்டமாகவே (‘Muslim Personal Law’) விளங்கி வந்தது. அன்று அரசியல் சாசனத்தில் 121A என்ற பிரிவை ஏற்படுத்த ஆதரவு கொடுத்ததே இந்த அம்னோவின் பங்காளித்துவ கட்சிகளே. அதற்க்கு அன்று கொடுக்கப் பட்ட விளக்கம், சிவில் நீதிமன்றத்துக்கும், சரியா நீதிமன்றத்துக்கும் இடையே இருக்கும் சட்ட இடையூறுகளை விளக்கவே என்று மாமாக்தீரால் சமாதானம் கூறப்பட்டது. அதையும் நம்பி ஆதரித்தவர்தான் இந்த அம்னோ பங்காளித்துவ கட்சிகள். இன்று நிலை என்ன?. சரியா நீதிமன்றம், சிவில் நீதிமன்றத்திற்கு உட்பட்ட விவகாரங்களில் மூக்கை நுழைத்து கண்ணில் விரலை விட்டு ஆட்டுகின்றது. இதனை தட்டிக் கேட்க அம்னோவின் பங்காளித்துவ கட்சிகளுக்குத் தியானி இல்லை. இதனை எதிர்கொள்ள முஸ்லிம் மலாய்க்காரர்களை பெருவாரியாகக் கொண்ட நீதிபதிகளுக்கு தட்டிக் கேட்டு தனது சிவில் நீதிமன்ற உரிமையைப் பாதுகாக்க எண்ணமில்லை அல்லது தைரியமில்லை. அதன் விளைவே மதம் மாறிப் போன கணவனுக்கு ஒரு சரியா நீதிமன்ற தீர்ப்பைக் கொடுத்து, பிள்ளைகளப் பெற்றெடுத்த தாயின் அனுமதி இல்லாமல் பிள்ளைகளின் மதம் மாற்ற உரிமை கொடுத்தது. இன்று சிவில் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு இருக்கும் குற்றங்களுக்கு இஸ்லாமிய மத அடிப்படையிலான சட்டதிட்டங்களைக் கொண்டு தண்டனை வழங்குவது என்பது நமது அரசியல் சாசனத்தையே “secular based constitution’ என்பதை மாற்றி ‘Islamic theology based constitution’ என்ற நிலைக்கு இட்டுச் செல்லும். இதைத்தான் அமரர் கர்பால் கிளாந்தானில் இயற்றப் பட்ட ஹுடுத் சட்டம் அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது என்ற கடுமையாக எதிர்த்தார். இந்த மாற்றம் வந்தால் அடுத்து மலேசியா இஸ்லாமிய நாடாக மாறுவதில் இருந்து நீங்களும் நானும் தப்ப முடியாது. அப்புறம் நாம் நமது சமயத்தைப் பின் பற்றவே பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை மறந்து விடாதீர்கள். இதைத்தான் இஸ்லாமிய மத தீவீரவாதிகளும் எதிர்பார்க்கின்றார்களோ?
இந்த பாஸ் கட்சி கொண்டு வர இருக்கும் அரசியல் சாசன மாற்றம் என்பது மலேசியாவின் அரசியல் சாசனத்தை அதன் அடித்தள கட்டுமானத்திலிருந்தே (‘basic structure’) வேற்றொரு நிலையிலான அரசியல் சாசனமாக மாற்றி விடும். மலாயாவையும் பின்னர் மலேசியாவையும் நிறுவிய நமது முன்னோர் இத்தகைய மாற்றம் கொண்ட அரசியல் சாசனத்தை முன்னமே ஏற்கவில்லை என்பதே உண்மை. ஆகா, இப்பொழுது ஏன் இந்த மாற்றம் தேவை என்பதை பாஸ் கட்சி நிரூபிக்க வேண்டும். அரசியல் சாசன மாற்றம் என்பது ஒரு தனிபட்ட அரசியல் கட்சிக்கு உரிய உரிமை அன்று. இத்தகைய மாற்றத்தை மலேசியா மக்கள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே செய்ய வேண்டும். இல்லையேல், மலேசியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கு பாஸ் கட்சி ஊறு விளைவிக்கின்றது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது மக்கள் கூட்டணியின் பங்காளித்துவ கட்சிகளின் கடமை. இதைக் கூட ஜ.செ.க. கட்சியாலும், மக்கள் நீதிக் கட்சியாலும் செய்ய முடியவில்லை என்றால் உங்களுக்கு ஏன் நாங்கள் ஓட்டுப் போடா வேண்டும்?. நீங்கள் எங்களுடைய பிரிதிநிதியாக இருக்க தகுதி அற்றவர்களாகி விடுவீர்கள். தொடரும்.
இந்த அடிப்படை சட்ட நுணுக்கங்கள் கூட அறியாமல் ம.இ.க. தலைவர்கள் பாஸ் கட்சியை நாங்கள் தனிமையில் சந்தித்து பேசுவோம் என்று அறிக்கை விடுவதின் மடமை ஏனோ?. ‘You ought to reject such proposal outright. There is no need to talk in private”. இத்திருத்தமானது முஸ்லிம் மக்களுக்கும் மட்டுமே ஹுடுத் சட்டம் அமுல்படுத்த வேண்டியது என்று பாஸ் கட்சி வாதிடுவது அறிவுடமையாகாது. ஒரே மாதிரியான தவறு செய்த வெவ்வேறான மதத்தைச் சார்ந்த இருவருக்கு வெவ்வேறான வழக்கு விசாரணையும், வெவ்வேறான தண்டனையும் என்பது நமது அரசியல் சாசனத்தையும் நமது அவிலித்தனத்தையும் உலக ரீதியில் எள்ளி நகைக்க வைத்திடும். இப்ப நாம் MH 370 – ல் நடத்தும் மானங்கெட்ட பிழைப்பை விட இன்னும் மானங்கெட வேண்டுமா அரசியல்வாதிகளே?. சிந்தியுங்கள், செயல்படுங்கள். வெறுமனே தூங்கிக் கொண்டிருக்க உங்களுக்கு மக்கள் வரிபணத்தில் சம்பளமும் சன்மானமும் கொடுக்கப் படவில்லை. தண்டச் சோறு சாப்பிட்டுக் கொண்டு மக்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம்.
இதில் வருத்தம் என்வென்றால் மஇ கா அமைச்சர்கள் எவரும் வாயை திறக்காமல் இருபது .மற்றும் மானம் கெட்ட நல்லகருப்பன் தனேந்திரன் சம்பந்தன் இன்னும் தூங்கீ கொண்டு இருகிறார்கள் .இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் மக்களை எமற்றும் ஒரு மலேசியா கொள்கை .
ஒபாமாவை அரண்மனை,பிரதமர் சந்தித்தபோது கவணித்தீரா,ஒபாமா நடுவில்,வலது பக்கம் அகோங் இடது பக்கம் அகோங் துணைவியார்,அகோங் வலது பக்கம் பிரதமர்,இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால்,ஒபாமாதான் இந் நாட்டு தலைவர்.இவன்கள் வெறும் பூச்சான்டி காட்டுறான்கள் என்பது தின்னம்.ஆண்மீகவாதியாக நாம் வாழும் வரை ஜனனாயகம் காக்கப்படும்.கட்டுப்பாடற்ற சுதந்திரம் நம்மை தடம் தெரியாது அழித்துவிடும்.டி.ஏ.பி,கொள்கையை தான் இன்று நாம் யாசிக்கிரோம்.அடிலான் நிலைபாடு என்ன,இஸ்லாம் நாடா ஜனனாயக நாடா?.டி.ஏ.பி,யின் நிலைபாடு நாடே அறியும்.இன்டர்நேஷினல் சட்டம் தேவை,அவசியம்.இதில் வல்லவர்கள் இன்ராப் தலைவர்கள்,அவர்கள் முன் வரவேண்டும்.இன்ராப் கை ஓங்கினால் இவன்கள் கொட்டம் அடங்கும்.வாழ்க நாராயண நாமம்.