“பொய்” உரைத்தார் என்ற டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கின் கடுமையான சாடாலுக்கு ஆளான ஒரு நாளுக்குப் பின்னர், இன்று பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா கிளந்தானில் ஹூடுட் சட்டம் அமல்படுத்துவதற்கு டிஎபி ஒப்புக்கொண்டது என்று தாம் தெரிவித்ததாக கூறப்படுவதை மறுத்தார்.
“அது (ஹூடுட்) மலேசியாவின் எப்பகுதியிலும் அமலாக்கப்படுவதற்கு பக்கத்தான் ரக்யாட் ஒப்புக்கொண்டதாக நான் குறிப்பிட்டதே இல்லை”, என்று கூறிய அவர், தாம் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டார்.
தியன் சுவ சொல்லி இருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன் ,அவர் ஒன்றும் கேனையன் அல்ல
இந்த பக்காத்தான் தலைவர்கள், விளம்பரம் வேண்டும் என்பதற்காக எதையாவது உளறிக் கொண்டிருக்கிறார்கள். அம்னோ பின்னிய வலையில் பக்காத்தானின் ‘அறிவுக் களஞ்சியங்கள்’, ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொள்கின்றன. வர வர இந்த பக்காத்தானின் சண்டை சச்சிரவுகள், நாற்றமெடுத்த பாரிசானை விட கேவலமாக போய்க் கொண்டிருக்கிறது
நானும் வாசித்ததுண்டு,ஊடூட்டுக்கு ஆதரவு வாசகத்தை தியான் சுவா பேசி கேட்டதுன்டு.பி.என்,சொதப்பியதால் இவனும் கழன்டுக்கொண்டான்,வாழ்க நாராயண நாமம்.
அது அப்போ, இது இப்போ. அது வேற வாய், இது வேற வாய்.