ஜிஎஸ்டியை 62 விழுக்காடு மலேசியர்கள் நிராகரிக்கின்றனர்

 

GST - pollபொருள்கள் மற்றும் சேவைகள் வரியை (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்த மலேசிய அரசாங்கம் 30 ஆண்டுகளாக திட்டமிட்டிருந்ததோடு, சமீபத்தில் அவ்வரியினால் மக்களுக்கு கிடைக்க விருக்கும் நன்மைகள் குறித்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த போதிலும், 62 விழுக்காடு மலேசியர்கள் அவ்வரியை நிராகரிக்கின்றனர் என்று மெர்டேக்கா மையம் இன்று அறிவித்தது.

நாட்டின் அனைத்து இனங்களையும் பிரதிநிதிக்கும் வகையில் 1,009 பதிவு செய்யப்பட்டGST - poll1 வாக்காளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருவரில் ஒருவருக்கு ஜிஎஸ்டி என்றால் என்ன என்று ஒன்றுமே தெரியாது என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 12 லிருந்து ஏப்ரல் 21 ஆம் தேதி வரையில் நடத்தப்பட்ட ஆய்வில் 64 விழுக்காட்டினருக்கு பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி எதுவுமே தெரியாது.

இக்கருத்து பதில் அளித்தவர்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கிராமப்புறங்கள் மற்றும் மாதர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது”, என்று மெர்டேக்கா ஆய்வு மையம் வெளியிட்ட ஆய்வு கூறுகிறது.