மசீச இளைஞர் பகுதி, சீன அமைப்புகள், என்ஜிஓ-கள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 30 பேர், பாஸ் தலைமையகத்துக்கு முன்புறம், ஐந்து-நிமிட ஹுடுட்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
காலை மணி 10க்கு, கூட்டரசு பிரதேச மசீச இளைஞர் அணித் தலைவர் டான் கொக் எங் தலைமையில் கூடிய அவர்கள் “பாஸின் ஹுடுட் வேண்டாம்” என்று கூறும் பதாதைகளை ஏந்தி இருந்தனர்.
டான், பாஸ் கூட்டரசு அரசமைப்பை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை அதன் தலைமையகத்தில் ஒப்படைத்தார்.
போகிற போக்கை பார்த்தால், பாஸ் கட்சியும் அம்னோவும் ஒன்றாக இணையும் சாத்தியம் தெளிவாகவே தெரிகிறது. ம.சீ.ச., டி.எ.பி. இனாந்தாலும் இணையலாம். 2013 தேர்தலுக்குப் பின் டி.எ.பி.யில் உள்ள புதிய அங்கத்தினர்களில் பாதிப்பேர் ம.சீ.ச.வினர்.