புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் டிஎபியின் வேட்பாளராக ராம்கோபால் சிங் போட்டியிடுவார் என்பதை டிஎபி இன்று உறுதிப்படுத்தியது.
ராம்கோபால், 38, ஒரு வழக்குரைஞர். காலஞ்சென்ற கர்பால் சிங்கின் மூன்றாவது மகனாவார்.
கர்பால் சிங், டிஎபியின் முன்னாள் தேசியத் தலைவர், 2004 ஆம் ஆண்டிலிருந்து புக்கிட் குளுகோர் தொகுதியிலிருந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்.
பார்ட்டி சிந்தாவின் உதவித் தலைவர் ஹுவான் செங் குவான் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களான யாக்கோப் முகமட் நூர் மற்றும் முகம்மட் நபி பக்ஸ் ஆகிய மூவரை எதிர்த்து ராம்கோபால் போட்டியிடவிருக்கிறார்.
கடந்த மே 5 பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட மசீச களம் இறங்குவதா இல்லையா என்ற முடிவற்ற நிலையில் இருந்து வருகிறது.
புக்கிட் குளுகோர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாள் மே 12. வாக்களிப்பு நாள் மே 25.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அதன் அடிப்படையில் ராம்கோபால் சிங் தந்தையின் பெருமையை பெருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
என்ற திருக்குறள் மக்கட் பேறு அதிகாரத்தில்இடம் பெறுகிறது. இதன் அர்த்தம், தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும், என்பதாகும். அந்த வகையில் ராம்கோபால் அறிஞர் சபையில் சான்றோர் என்று பெயர்பெற வேண்டும் என்பதும் எம் விருப்பமாகும்.
உங்கள் தகப்பனின் சேவையை சிறப்புடன் தொடங்குங்கள் !
அடுத்த பொதுத்தேர்தலில் கர்பாளின் மகளுக்கும், லிம் கிட் சியாங்கின் மகளுக்கும் சீட் தர இப்போதே ஏற்பாடுகள் நடக்கிறதாம். Lim,Karpal sdn . bhd .
மக்களிடம் அன்பு செலுத்துகிறவர்கள் , கல்வியறிவு, ஆற்றல் அத்தோடு ‘நோட்டு’ உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப் பட்டால் போட்டியிடட்டுமே !!
இதிலென்ன அவர் மகள், இவர் மகள் !!
ராமன்,ராவண வதம் செய்ய துணை புரிந்தது யார் ?,சொந்த தம்பியா,வந்த தம்பியா ?.ராமனுக்கு துணை புரிந்தது சொந்த தம்பிகள் ஆனால் ராவணனை கொள்ள துணை புரிந்தது வந்த தம்பியே.ஆகயால் தொன்டர்கள் துணையே முக்கியம்.டி.ஏ.பி,பாஸ்க்கு நெருங்கி பழகியமைக்கு,கூட்டு கட்சி ஆகயால் இஸ்லாம் சட்ட அமலாக்கத்தை பழையவர் எதிர்க தயங்குவதால் ஒருக்கால் அத்துரைக்கு புதியவரை அமர்த்த திட்டமிட்டிருக்கலாம்.டி.ஏ.பி,துடுக்காக முடிவுகள் எடுக்காது நம்புவோம்.அது ஜனனாயக கட்சி.பழைய கட்சியும் கூட,அரசியலை ஞானக்கண் கொண்டு தான் அறிய முடியும்,ஊணகண்ணுக்கு தெரியாது.குரு தேவை போன்று,வாழ்க நாராயண நாமம்.
வாழ்த்துக்கள் சிறப்பாக இயங்குக .
யார் போட்டி போட்டாலும் தமிழன் குறைகளை கவினிக்க வேண்டும் .
எனக்கு சீட் இல்லைஎன்றால் என் மகனுக்கு இல்லை என் மகளுக்கு என போராடியவர்கள் மத்தியில் இது ஒன்றும் பெர்ய தப்பாக தெரியவில்லை?
ஓர் அனுதாப அலையாக தெரிகிறது. கட்சியினருக்கே வெளிச்சம்.
டீ எ பி யில் வேறு தகுதியானவர்கள் யாரும் இல்லையா? மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் குடும்ப அரசியலை ஊக்குவித்தால் மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். பிற நாடுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இது பரம்பரை தொழில் அல்லவே.