-அணா பாக்கியநாதன், மே 11, 2014.
கோல்பீல்ட்ஸ் தோட்டத்தில் சிலாங்கூர் அரசால் கட்டப்படும் மாணவர் தங்கும் விடுதி மற்றும் பள்ளிக்கு உடனடியாக டெண்டர் சமர்ப்பிக்க வேண்டிய பணிகளைச் செய்யச் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் பின் இப்ராஹிம் ஜே.கே .ஆர் என்னும் பொதுப்பணி துறைக்குக் கட்டளையிட்டார்.
சுமார் 500 மாணவர்கள் தங்கும் வசதிகளுடன் 50 லட்சம் வெள்ளி செலவில் கட்டப் படவிருக்கும் இவ்விடுதி 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். இவ்விடுதி அத்தோட்டத்தின் முன்னாள் உரிமையாளரும் அங்கு நடைபெறும் மேம்பாட்டு திட்ட நிறுவனமான கோலாலம்பூர் கெப்போங் மற்றும் மாநில அரசின் கூட்டு திட்டமாகும் என்றார் மந்திரி புசார் காலிட்.
இவ்வாண்டுக்கான தமிழ்ப்பள்ளிகளின் மானியம் 40 லட்சம் வெள்ளிகள் கூடிய விரைவில் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பட்டுவாடா செய்யப்படும். கடந்த 2008 ஆம் ஆண்டு பக்காத்தான் கட்சிகள் சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சியமைத்தபின் உடனடியாகப் போட்ட திட்டங்களின் ஒன்று இஸ்லாமிய, சீன, தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்குவது.
இதற்கு முன் இம்மாநிலத்தை ஆண்ட பாரிசான் நேசனல் அரசு, தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளைச் சரியாகக் கவனிக்காததால் தமிழ்ப்பள்ளிகளின் நிலை மிக மோசமாக இருந்தது. அதனால், ஆண்டுதோறும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் இந்த உதவித்தொகையின் வழி தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது நமது நோக்கம்.
இந்த திட்டத்தின் கீழ் 2009 ம் ஆண்டு தொடங்கி இதுவரை 2 கோடி 40 லட்சம் வெள்ளி மானியத்தை மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கி உள்ளது. அதில் 2 கோடி வெள்ளிகள் எல்லா 97 தமிழ்ப் பள்ளிகளுக்கும் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.
இவ்வாண்டுக்கான ஒதுக்கீட்டு தொகையான 40 லட்சம் வெள்ளிகளை வழங்கும் முன், இந்த நிதி பரிந்துரை மற்றும் பட்டுவாடா செயற் குழு அதன் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாய்வறிக்கை கிடைத்தபின், நிதி வழங்குதல் நடைபெறும்.
கல்விக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் புவான் அலிமா அலி, அதற்கான பணிகளைத் துரிதப்படுத்துவார். கல்வியின் வழி மக்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் பக்காத்தான் ராயாட்டின் கடப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை என்றார் மந்திரிபுசார்.
பாராடுக்கள்.,தொடர்ந்து இனம் பார்க்காமல் எல்லா மொழிப் பள்ளிக்கூடங்களுக்கும் நேர்மையான முறையில் தொடருங்கள் இன்னும் 50 ஆண்டுகளுக்கு உங்களை யாரும் அசைக்க முடியாது, அதே போன்று அரசாங்க பணிகளிலும் சம வாய்ப்பு தரப்பாருங்கள்!!
சரி பெனங்கில் தமிழ் இடைநிலை பள்ளிக்கான இடம் மாநில அரசால் கொடுக்க பட்டு நெடு நாள் ஆகிவும் கூட மத்திய கல்வி அமைசு இன்னும் பள்ளி இயங்க
லைசென் கொடுக்கதது ஏன் ?
நமது தாய் கட்சி என்ன செய்கிறது? எங்கயாவது செனட்டர் நாற்காலி கிடைக்குமா காத்திருக்கும்!
ஜிங் ஜ அடிக்க
பக்கத்தான் மீண்டும் அதிக பெரும் பன்மையில் சிலங்க்கூர் மாநிலத்தை கை பற்றியதக்கு முக்கிய காரணம் தமிழ் பள்ளி நிதி மற்றும் ஆலயங்களுக்கு வழங்கிய நிதி தான்.52 ஆண்டுகளாக சிலங்க்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி ஆண்டு வந்தது.தேசிய முன்னணி ஆட்சியில் இந்தியர்கள் மாநில அரசிடம் கை ஏந்தி பிச்சை எடுக்கும் நிலையில் தான் அம்னோ ஆட்சி செய்து வந்தது.ஆனால் 2008 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பிறகு மாநில அரசை பக்கத்தான் கை பற்றியது.மாநில கஜானாவையே காலி செய்து வைத்திருந்தனர் தேசிய முன்னணி.மாநில அரசை மீண்டும் வலு படுத்தி, நிதி திரட்டி நல ஆட்சியை வழங்கியது மக்கள் கூட்டனி என்ற பக்கத்தான் ஆட்சி.டாக்டர் சேவியர் ஜெயகுமாரின் சேவை மகத்தானது.ம இ கா 52 ஆண்டுகளாக செய்ய தவறியதை சேவியர் செய்து முடித்தார்.அவர் மீண்டும் மாநில ஆட்சி குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் யார் செய்த சதியோ அவருக்கு மீண்டும் மாநில ஆட்சிக்குழுவில் இடம் கிடைக்கவில்லை.கோல் பீல்ட்ஸ் தமிழ் பள்ளி திட்டமும் அவரால் வரையப்பட்டது தான்.இந்த திட்டத்தை செய்து முடிடிக்க வேண்டும் சிலங்க்கூர் மாநில அரசு.
ம இ கா வாழ் மலேசியா இந்தியர்களுக்கு நல்லது செய்ய முடியாவிடாலும் கேட்டது செய்ய முடியும்.இந்த ஒரு திட்டத்தையே நாடு முழுவது தந்தார போட்டு விடுவார்கள் என்பது திண்ணம்.தன் ஸ்ரீ காலிட் இப்ராகிம் இந்தியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டார் என்று நம்புகிறோம்.
இந்தியர்கள் வெகு எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கத் தேவையில்லை! இத்திட்டம் எப்பொழுது தீட்டபப்ட்ட திட்டம்? இப்பொழுதுதான் உத்தரவு வந்துள்ளது….கட்டச்சொல்லி! இன்னும் கட்ட ஆரம்பிக்கவில்லை! உங்களுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் கொஞ்சம் ஓரங்கட்டி சேமித்து வையுங்கள்! ஒரு பக்கம் 12 000 இந்திய மாணவர்கள் பிற ஆரம்பப் பள்ளிகளில் பயில்கின்றனர் என்ற தமிழ்ப் பள்ளிகளுக்கு சாவுமணி அடிக்கின்ற செய்தி! மறுபக்கம் தமிழ்ப் பள்ளிகள் மறு சீரமைப்பு திட்டத்திற்கான தேசியக் கருத்தரங்கம்! இன்னொரு பக்கம் நாமெல்லாம் வந்தேறிகள் ….. உழையுங்கள் ….சம்பாதியுங்கள் …… முழுமையாக வரியைச் செலுத்துங்கள் ….ஆனால் உரிமை என்று எதனையும் கேட்காதீர்கள்! என்ற கூப்பாடு!! ஓர் அரசு சார்பற்ற அமைப்பு ஊளையிடுவதை இந்த பாக்காத்தான் அரசும் தடுத்து நிறுத்தாமல் வேஷம் போடுகிறது! உண்மையில் என்னதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! சிந்தியுங்கள்….சிந்தித்து எதனையும் சொல்லுங்கள் …செய்யுங்கள்!