முஸ்லிம் என்ஜிஓ-வான இக்ராம், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் ஹுடுட் சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்வதில்லை என்ற பாஸின் முடிவை வரவேற்றுள்ளது.
இஸ்லாமிய சட்டத்தைச் செயல்படுத்துவதற்குமுன் “அனவருக்கும் நியாயம் கிடைப்பதையும் நல்வாழ்வு அமைவதையும் உறுதிப்படுத்த வேண்டும்”, என இக்ராம் தலைவர் முகம்மட் பாரிட் ஷேக் ஓர் அறிக்கையில் கூறினார்.
கிளந்தானில் இஸ்லாமிய சட்டம் கொண்டுவரப்படுவதை இக்ராம் ஆதரிக்கிறது. ஆனால், அதற்குமுன், நாட்டின் சமூக-பொருளாதார, அரசியல் அடிப்படைகள் சரியாக அமைந்திருப்பது அவசியம் என்றவர் சொன்னார்.
“நெருக்குதலின் காரணமாகவோ கட்டாயத்தின்பேரிலோ மக்கள் குற்றச் செயல்களை நாடாதிருப்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும்”,என்றாரவர்.