தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் போக்கஸ்-எ இணையதள வழி கற்றல் (Focus-A E-Learning) செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கிரியேட்டிவ் டிரீம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் மலேசிய தமிழ் அறவாரியம் ஆகியவை இணைந்து உருவாக்கியதாகும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குறைந்தபட்சம் 80 விழுக்காடு தேர்வு நிலையை அடைய வேண்டும் என்ற தமிழ் அறவாரியத்தின் நோக்கத்தை செயல்படுத்த இந்த இணையதள வழி கற்றல் பேருதவியாக இருக்கும். எந்த ஒரு மாணவனும் அடையும் ஒரு குறைந்த விழுக்காடு முன்னேற்றமும் நமது தமிழ்ப்பள்ளிகளுக்கும் நமது இலட்சியத்திற்கும் பெரும் முன்னேற்றமாகும் என்று தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் குமாரி உஷாரானி ஓர் அறிக்கையில் கூறினார்.
நமது மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவான இந்த போக்ஸ்-எ இணையதள வழி கற்றல் செயல்திட்டம் கற்பித்தல் மற்றும் தனிப்பட்ட போதனை முறைகளை மேம்படுத்தக்கூடியது. இது கற்பதற்கான வழிமுறைகளில் மிக அண்மையானது என்பதோடு ஆசிரியர்கள் மாணவர்களின் அன்றாட முன்னேற்றத்தை அடைவுநிலை அட்டையின் வழி கண்காணிக்க உதவுகிறது. இத்திட்டத்தை “மலேசிய புத்தாக்கம்” என்று மோஸ்டி (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு) அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கு எம்எஸ்சி தகுதியும் வழங்கப்பட்டுள்ளது என்று உஷா விளக்கம் அளித்தர்.
தொடக்கமாக, இத்திட்டம் கணினி ஆய்வுக்கூடம் மற்றும் இணையதள வசதிகளைக் கொண்டுள்ள சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தப்படும்.
இத்திட்டத்தை பள்ளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாளை (மே15, 2014) வியாழக்கிழமை காலை மணி 10.00 லிருந்து பிற்பகல் மணி 2.00 வரையில் CDI HQ, Unit 516, 5th Floor, Block E, Phileo Damansara 1, Section 16, PJ. (beside EASTIN Hotel & STAR building) என்ற இடத்தில் நடைபெறும்.
கணினி ஆய்வுக்கூடம் மற்றும் இணையதள வசதிகள் இல்லாத தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றன.
துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்கிறார்.
மேற்கொண்டு தகவல் பெறுவதற்கு குமாரி உஷாரானி 016-9700765 மற்றும் தமிழ் அறவாரியம் 03-2692 6533 ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ் அறவாரியத்தின் காலத்திற்கேற்ற இணைய வழி கற்றல் திட்டம் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துகள்.
ஸ்கோர் ஏ என்பது கல்வியை மூலதனமாக்கிய ஒரு நேரடி வியாபாரதிட்டம். இவ்வியாபார திட்டம் தொடங்கிய ஆண்டுகளில் பெற்றோர்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மாணவர்களின் கல்விதர உயர்வுக்கும் பாதுகாப்புக்கும் உத்ரவாதம் கொடுத்தது. மாணவர்களை வெளியில் டியூசன் வகுப்புகளுக்கு அனுப்புவதால் ஏற்படும் அளைச்சல் நேரம் இன்மை போன்ற சிக்கல்களைக் களைய மாற்று கல்வி பயில் முறையாக ஸ்கோர் ஏ அறிமுகப்படுத்தப் பட்டது. வியாபார அடிப்படையில் வழக்கமான MLM திட்டங்கள் போல ஒரே ஆண்டில் BMW new series வாங்கிவிடலாம், இரண்டு ஆண்டில் லச்சாதிபதியாகி விடலாம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வியாபாரிகளை இழுத்தது. பல இளைஞர்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டனர். பல ஆசிரியர்கள் தங்கள் தொழில் அடையாளத்தை விளம்பரப்படுத்தி ஸ்கோர் ஏ வியாபாரம் செய்தனர். ஆனால் எல்லாம் மூன்று நான்கு ஆண்டுகளில் கானல் நீர் ஆனது. மாணவர்கள் கல்வி தேர்ச்சியும் முன்னேறவில்லை. இந்த வியாபாரத்தில் ஈடுபட்ட நபர்களும் மில்லியனெர் ஆகவில்லை. ஸ்கோர் ஏ போன்றே பல கல்வி வியாபார திட்டங்கள் அறிமுகம் கண்டன. ஸ்கோர் ஏ தோல்வி கண்ட ஒரு வியாபார திட்டமானது. இப்போது ஸ்கோர் ஏ வியாபாரம் செய்பவர்களை பார்ப்பது அறிதாக உள்ளது. மோஸ்தி அங்கீகாரம் என்பது தொழில் நுட்பம் சார்ந்த அங்கீகாரம். அது உற்பத்தி பொருளின் புத்தாக்க சிறப்புக்கு கொடுக்கப்படுவது. அதற்கும் கல்வி வெற்றி உறுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஸ்கோர் ஏ, நவீன தொழில் நுட்பம் சார்ந்த கல்வி உத்தி என்றாலும் அது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எந்த பங்கும் கொடுக்கவில்லை என்பதே உண்மை. ஸ்கோர் ஏ வை முன்பு பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்திய பெற்றோர்களிடம் கேட்டால் அதன் உண்மை நிலவரம் தெரியும்.
இனி நமது வியப்பு தமிழ் அறவாரியத்தின் மீது திரும்புகிறது. ஒரு தோல்விகண்ட MLM வியாபாரத்திற்கு அறவாரியம் ஆதரவளிக்க வேண்டிய அவசியம் என்ன? சந்தையில் வியாபாரம் ஆகாத பொருட்களை கொண்டுவந்து கொட்ட தமிழ்ப்பள்ளிகளும் அதை கண்காணிக்க தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும்தான் கிடைத்தார்களா?
அறவாரியம் பொது பணத்தைக் கொண்டு இயங்கும் ஒரு தன்னார்வ இயக்கம். ஆகவே ஒரு தனியார் நிருவனத்தின் உற்பத்தி பொருளை மாணவர்களுக்கு கொடுப்பதில் வெளிப்படை தன்மை வேண்டும். ஸ்கோர் ஏ வியாபாரிகளுக்கும் தமிழ் அறவாரியத்திற்கும் என்ன தொடர்பு என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அதோடு ஸ்கோர் ஏ-யை பள்ளிகளிடம் ஒப்படைப்பதன் வழி ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் கூடுதல் பொறுப்புகள் யாவை என்பதையும் அறவாரியம் விளக்கவேண்டும்.
[குறிப்பு: இதற்காக தமிழ் அற்வாரியம் எந்த பணத்தையும் செலவிட இல்லை. இனாமாக அளித்ததை மட்டுமே பள்ளிகளுக்கு வழங்கியது. – ஆசிரியர். ]
மேல் உள்ள பத்தி தவறுகள் கொண்டது தயவு செய்து அதை நீக்கிவிடவும். தவறுக்கு வருந்துகிறேன். சரியான பத்தியை இதன் பின் பதிவேற்றுகிறேன்.
போக்கஸ் ஏ என்பது கல்வியை மூலதனமாக்கிய ஒரு நேரடி வியாபாரதிட்டம். இவ்வியாபாரதிட்டம் இதே போன்ற வேறு ஒரு திட்டத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்டது. இவ்வியாபார திட்டம் தொடங்கிய ஆண்டுகளில் பெற்றோர்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மாணவர்களின் கல்விதர உயர்வுக்கும் பாதுகாப்புக்கும் உத்ரவாதம் கொடுத்தது. மாணவர்களை வெளியில் டியூசன் வகுப்புகளுக்கு அனுப்புவதால் ஏற்படும் அளைச்சல் நேரம் இன்மை போன்ற சிக்கல்களைக் களைய மாற்று கல்வி பயில் முறையாக போக்கஸ் ஏ அறிமுகப்படுத்தப் பட்டது. வியாபார அடிப்படையில் வழக்கமான MLM திட்டங்கள் போல ஒரே ஆண்டில் BMW new series வாங்கிவிடலாம், இரண்டு ஆண்டில் லச்சாதிபதியாகி விடலாம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வியாபாரிகளை இழுத்தது. பல இளைஞர்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டனர். பல ஆசிரியர்கள் தங்கள் தொழில் அடையாளத்தை விளம்பரப்படுத்தி போக்கஸ் ஏ வியாபாரம் செய்தனர். ஆனால் எல்லாம் மூன்று நான்கு ஆண்டுகளில் கானல் நீர் ஆனது. மாணவர்கள் கல்வி தேர்ச்சியும் முன்னேறவில்லை. இந்த வியாபாரத்தில் ஈடுபட்ட நபர்களும் மில்லியனெர் ஆகவில்லை. போக்கஸ் ஏ போன்றே பல கல்வி வியாபார திட்டங்கள் அறிமுகம் கண்டன. போக்கஸ் ஏ தோல்வி கண்ட ஒரு வியாபார திட்டமானது. இப்போது போக்கஸ் ஏ வியாபாரிகளைப் பார்ப்பது அறிதாக உள்ளது. மோஸ்தி அங்கீகாரம் என்பது தொழில் நுட்பம் சார்ந்த அங்கீகாரம். அது உற்பத்தி பொருளின் புத்தாக்க சிறப்புக்கு கொடுக்கப்படுவது. அதற்கும் கல்வி வெற்றி உறுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. போக்கஸ் ஏ, நவீன தொழில் நுட்பம் சார்ந்த கல்வி உத்தி என்றாலும் அது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எந்த பங்கும் கொடுக்கவில்லை என்பதே உண்மை. போக்கஸ் ஏ வை முன்பு பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்திய பெற்றோர்களிடம் கேட்டால் அதன் உண்மை நிலவரம் தெரியும்.
இனி நமது வியப்பு தமிழ் அறவாரியத்தின் மீது திரும்புகிறது. ஒரு தோல்விகண்ட MLM வியாபாரத்திற்கு அறவாரியம் ஆதரவளிக்க வேண்டிய அவசியம் என்ன? அதிலும் காலத்தால் புறக்கணிக்கப்பட்டு விட்ட ஒரு கற்றல் முறையை அறவாரியம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்ப்பள்ளிகளின் தலையில் கட்டவேண்டிய அவசியம் என்ன? சந்தையில் வியாபாரம் ஆகாத பொருட்களை கொண்டுவந்து கொட்ட தமிழ்ப்பள்ளிகளும் அதை கண்காணிக்க தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும்தான் கிடைத்தார்களா? அல்லது வெளியில் வியாபாரம் செய்ய முடியாத பொருளை மொத்தமாக அறவாரியத்தின் தலையில் கட்டும் வியாபார சூழ்ச்சி வெற்றிகரமாக நடைபெருகிறதா?
அறவாரியம் பொது பணத்தைக் கொண்டு இயங்கும் ஒரு தன்னார்வ இயக்கம். ஆகவே ஒரு தனியார் நிருவனத்தின் உற்பத்தி பொருளை பணம் கொடுத்து வாங்கி மாணவர்களுக்கு கொடுப்பதில் வெளிப்படை தன்மை வேண்டும். போக்கஸ் ஏ வியாபாரிகளுக்கும் தமிழ் அறவாரியத்திற்கும் என்ன தொடர்பு என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அதோடு போக்கஸ் ஏ -யை பள்ளிகளிடம் ஒப்படைப்பதன் வழி ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் கூடுதல் பொறுப்புகள் யாவை என்பதையும் அறவாரியம் விளக்கவேண்டும்.
(இலவசமாக கொடுக்கப்பட்டதை தமிழ்ப் பள்ளிகளுக்கு கொடுத்தோம் என்று அறவாரியம் சொல்லுவது ஏற்புடையதா?. அந்த பொருளின் நன்மை தீமைகளை, அப்பொருள் இலவசமாக கொடுக்கப்படுவதன் உள்நோக்கத்தை ஆராய மாட்டீர்களா?. நாலும் தெரிந்த தமிழ் அறவாரியம் இப்படி ஏனோ தானோ என்று பதில் தரலாமா?)