மனித உரிமைகளுக்கு கட்டுப்பட்டுள்ளோம், நஜிப் விளக்கம்

 

மலேசியர்கள் பல்லின மற்றும் பல்வேறு சமயப் பின்னணிகளைக் கொண்டிருந்த போதிலும் மனித உரிமைகளின் குறிக்கோள்கள் மற்றும்Najib - Human Rights கோட்பாடுகளுக்கு அரசாங்கமும் மலேசிய மக்களும் கட்டுப்பட்டுள்ளோம் என்று பிரதமர் நஜிப் ரசாக் இப்போது கூறுகிறார்.

மலேசியா முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நாடாக இருந்தாலும், மக்கள் எப்போதும் மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்கின்றனர்.

“மலேசியர்கள் என்ற முறையில், நாங்கள் மனித உரிமைகளுக்கு ஆதரவு அளிக்கிறோம். உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள சித்தாங்கள், பொதுமைக் கருத்துகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோம்”, என்று அவரது வலைதளத்தில் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது இப்படி கூறும் நஜிப், கடந்த செவ்வாய்க்கிழமை குவாந்தானில் மனித உரிமைத்துவத்தை ஒரு புதிய சமயம் என்றும் அது இஸ்லாத்திற்கு மருட்டலாக உள்ளது என்றும் கூறியிருந்தார். அவரின் அக்கூற்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது.