பினாங்கு சட்டமன்றக் கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களைப் பொறுத்தவரை, இன்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் “அம்னோ அரசியல்வாதிபோல்” நடந்துகொள்கிறார் என அலோர் ஸ்டார் பிகேஆர் எம்பி கூய் ஹிசியாவ் லியாங் குறைகூறினார்.
புதன்கிழமை நடந்த அச்சம்பவத்தில் அம்னோ, பெர்காசா உறுப்பினர்களும் தீவகற்ப மலாய் மலாய் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் பினாங்கு சட்டமன்றத்துக்குள் முரட்டுத்தனமாக புகுந்து ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்,என், ராயரைத் தேடினார்கள்.
போலீசார் அந்த அம்னோ-ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்தவில்லை. எனவே, கடமையைச் செய்யத் தவறிய போலீசாரைக் கண்டிப்போரை காலிட் குறைசொல்லக்கூடாது என கூய் கூறினார்.
“நிறைய போலீசார் இருந்தபோதும் அவர்கள் ஊடுருவல்காரர்களை உடனடியாக தடுத்து நிறுத்தாதது அவர்கள் யாரைப் பாதுகாக்கிறார்கள் – அம்னோவையா, சட்டமன்ற உறுப்பினர்களையா- என்ற கேள்வியை எழுப்புகிறது”, என்றாரவர்.
5 வருடத்திற்கு ஒரு முறை தேர்தல்,மத்திய ஆட்சி நிரந்தரமில்லாதது.போலீசாரோ அதே பதவியில் இருந்து கடமை ஆற்ற வேண்டும்.எதிர்க்கட்சி ஆளும் கட்சியானால் பிறகு தெர்யும் இவர்களின் நிலை.பொலிசாருக்கு நடு நிலையோடு ஒரே சட்டத்தில் செயல்படவேண்டுமே தவிர தடுமாற வேண்டிய அவசியம் இல்லை.
காவல் துறை ஆதரவோடுதானே கலகக் காரர்கள் உள்ளே புகுந்து உள்ளனர் பிறகு எப்படி நடவடிக்கை எடுப்பது..?