தெலோக் இந்தானில் இந்தியர்கள் வெற்றியாளரை நிர்ணயிப்பார்கள்

candகடும்  போட்டி  நிலவும்  தெலுக்  இந்தான்  இடைத்  தேர்தலில்  இந்திய  வாக்காளர்களே  வெற்றியாளரைத்  தீர்மானிப்பவர்களாக  திகழக்  கூடும்.

அங்கு  சீன  வாக்காளர்களில்  42  விழுக்காட்டினர்  டிஏபி-யை  ஆதரிப்பார்கள்  என  எதிர்பார்க்கப்படுகிறது.  மலாய்  வாக்காளர்களில் 38 விழுக்காட்டினர்  பிஎன்னை  ஆதரிக்கலாம். இந்நிலையில்  இந்தியர்களின்  வாக்குகளே  வெற்றியாளரைத்  தீர்மானிக்கும்.

“சீனர்களின்  ஆதரவைப்  பெறுவது  சிரமம்  என்பதை  பிஎன்  அறியும். டிஏபி  மலாய் வேட்பாளரைக்  களமிறக்கியிருப்பதால்  மலாய்  வாக்குகளில்  ஒரு  பகுதி  அவருக்குச் செல்லும். எனவேதான்  இந்தியர்களின்  வாக்குகளைப்  பெறும்  முயற்சியில்  முழுமூச்சாக  ஈடுபட்டிருக்கிறார்கள்”, என  டிஏபி-இன்  பத்து  காஜா  எம்பி வி. சிவகுமார்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அத்தொகுதியின் 60,349  வாக்காளர்களில்  11,500 பேர்  அதாவது 19 விழுக்காட்டினர்  இந்தியர்கள்