ஆத்திரப்படாமல் அமைதியாக இருக்குமாறு என்ஜிஓ-களுக்கு அபிம் அறிவுறுத்தல்

cadburyகேட்பரி-எதிர்ப்பு  என்ஜிஓ-கள்  அந்த சாக்லெட்  தொழிற்சாலையைத்  தீவைத்துக்  கொளுத்த  வேண்டும்  என்றெல்லாம்  ஆவேசப்படாமல்  அமைதிகாக்க  வேண்டும்  என மலேசிய  இஸ்லாமிய  இளைஞர்  இயக்கம்(அபிம்)  வலியுறுத்தியுள்ளது.

அந்த  நிறுவனம்,  அதன்  சாக்லெட்  பொருள்கள்  பலவற்றில்  பன்றி சம்பந்தப்பட்ட  டிஎன்ஏ கலந்திருப்பது சுகாதார  அமைச்சின்  சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டதை  அடுத்து  விசாரணை  செய்யப்பட்டு  வருகிறது.

சட்டப்படி  அது தண்டிக்கப்படும்  என அபிம்  எதிர்பார்க்கிறது.

அதே  வேளையில்  சில  முஸ்லிம்  என்ஜிஓ-களின்  எதிர்வினைகள்  சங்கடம்  அளிப்பதாகவும்  அது  கூறியது.

“ஆத்திரப்பட்டு  பேசுவது  எல்லா  முஸ்லிம்களையும்  சங்கடப்படுத்துகிறது.  தொழிற்சாலைகளைக்  கொளுத்துவோம்,  இரத்தம் சிந்துவோம்  என்பதெல்லாம்  தீவிரவாத பேச்சாகும்”,  என  அபிம்  தலைவர்  அமிடி  அப்துல்  மனான்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.