தெலோக் இந்தான் தலைவிதி வெளியூர் வாக்காளர்களின் கைகளில்

voterதெலோக்  இந்தான்  இடைத்  தேர்தல்  முடிவு  அத்தொகுதிக்கு  அப்பால்  வசிக்கும்  வாக்காளர்களால்  தீர்மானிக்கப்படும்  எனக்  கருதப்படுகிறது.

வெளியூர்களில்  உள்ள  வாக்காளர்கள்  பெருமளவில்  திரும்பி  வந்தால்  அது  டிஏபி-இன்  வெற்றிக்கு  உதவும்.  குறைந்த  எண்ணிக்கையினரே  திரும்பி  வந்தால்  அது  பிஎன்னுக்குச்  சாதகமாக  அமையும்.

குத்துமதிப்பாக 30 விழுக்காட்டு  வாக்காளர்கள்  தொகுதிக்கு  வெளியே  வசிப்பதாகக்  கருதுகிறார்  பிஎன்  வேட்பாளர்  மா சியு  கியோங். அவர்களில்  மிகப்  பலர்  இளைஞர்கள், பெரும்பாலும்  எதிரணியை  ஆதரிப்பவர்கள்.

அவர்களைக்  கவரவே  டிஏபி ‘Jom Balik Undi (வாக்களிக்கத்  திரும்பிச்  செல்வோம்)’ இயக்கத்தைத்  தொடங்கியுள்ளது.  டிஏபி  தேர்தல்  பணியாளர்கள்  இடைத்  தேர்தலை  நினைவுப்படுத்தி  வாக்காளர்களுக்குக் குறுஞ்செய்திகளையும்  அனுப்பி  வருகின்றனர்.