முக்ரிஸ்: டியானாவின் பல முகங்கள் குழப்புகின்றன

mukகெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிர்,   தெலோக்  இந்தான்  டிஏபி வேட்பாளர்  டியானா  சோபியா  முகம்மட்  டாவுட்டின்  உருவப்படங்களைக்  கொண்ட  பல  சுவரொட்டிகளால்  குழப்பமடைந்திருக்கிறார்.

“பல  படங்களைப்  பார்க்கிறேன்……. ஒவ்வொன்றும் ஒவ்வொரு  மாதிரி.

“சிலவற்றில்  ‘துடோங்’ அணிந்திருக்கிறார், சிலவற்றில்  நிறுவன  அதிகாரிபோல்  காட்சியளிக்கிறார்,  சிலவற்றில்  ‘பாஜு  கூரோங்’  அணிந்திருக்கிறார்.

“ஒரே  குழப்பமாக  இருக்கிறது…….யார்  உண்மையான  டியானா…வழக்குரைஞரா இல்லையா…..எனக்குக்  குழப்பமாக  உள்ளது”,  என்று  முக்ரிஸ்  கூறினார்.