கேட்பரிக்கு மட்டுமல்லாமல் ஊழலுக்கு எதிராகவும் எதிர்ப்பைக் காட்டலாமே

muftiமுன்னாள்  பெர்லிஸ்  முப்தி  முகம்மட்  அஸ்ரி  சைனுல்  அபிடின்,  சாக்லெட்டுகளில்  பன்றி டிஎன்ஏ கலந்திருப்பதாகக்  கூறி  அளவுமீறி  ஆத்திரப்படும் முஸ்லிம்கள்  பெரும்  பாவங்களாகக்  கருதப்படும்  ஊழல்,  சூதாட்டம், வட்டி  முதலிய  விவகாரங்கள்  பற்றி  குறை  சொல்லாதது  ஏன்  என்று  கண்டித்திருக்கிறார்.

“கேட்பரிக்கு  எதிர்ப்புத்  தெரிவிப்பது  பாராட்டத்தக்கது.  அது  பயனீட்டாளர்களின்  உரிமை. அவர்கள்  ஏமாற்றப்படக்  கூடாது”, என்று  அஸ்ரி  கூறினார்.

“ஒருவர் ஹராமான  பொருளை  அறியாமல்  சாப்பிட்டால்  அது  பாவமாகாது….”.

ஆனால், ஹராம்  என்று  தெளிவாக  தெரிந்தும்  வட்டி, ஊழல், பொதுச்  சொத்துக்களைத்  தவறாக  பயன்படுத்தல்  போன்றவற்றுக்கு  எதிராக  முஸ்லிம்கள்  எதிர்ப்புத்  தெரிவிக்காமல்  இருப்பதுதான்  துரதிஷ்டவசமானது  என்றாரவர்.