இந்திரா காந்தி வழக்கு: சிவில் நீதிமன்றம் ஷரியா நீதிமன்றத்தை விட உயர்வானது, நீதிபதி தீர்ப்பு

 

Kula-Indra family members5சிவில் உயர்நீதிமன்றம் ஷரியா நீதிமன்றத்தை விட உயர்வான நீதிபரிபாலனத்தைக் கொண்டது என்று ஈப்போ உயர்நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

இஸ்லாத்திற்கு மதம் மாறாத இந்திரா காந்தி நீதி மன்ற உத்தரவுப்படி தமது குழந்தையை தம்மிடம் ஒப்படைக்குமாறு இஸ்லாத்திற்கு மதம் மாறிவிட்ட தமது முன்னாள் கணவருக்கு எதிராகத் தொடர்ந்திருந்த வழக்கில் ஈப்போ உயர்நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை அளித்தது.

இஸ்லாத்திற்கு மதம் மாறிய அக்குழந்தையின் தந்தை கே. பத்மநாதன் என்ற முகம்மட் ரித்துவான் அப்துல்லா அவரின் ஆறு வயது பெண் குழந்தையை இஸ்லாத்திற்கு மதம் மாறாத அக்குழந்தையின் தாயார் எம். இந்திரா காந்தியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அவருக்கு ஒரு வார கால அவகாசம் கொடுத்திருக்கிறது. அவர் நீதிமன்ற அவமதிப்பு புரிந்துள்ளதாகவும் நீதிமன்றம் கூறியது.

குழந்தையை ஒப்படைக்கத் தவறினால் நீதிமன்ற அவமதிப்புக்காகவும் நீதிமன்ற உத்தடவுப்படி நடந்துகொள்ளாததற்காக்வும் பத்மநாதனுக்கு எதிரான கைது ஆணையை போலீசார் அமலாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று நீதிபதி லீ ஸ்வி செங் கூறினார்.

தமது தீர்ப்பை வாசிக்க நீதிபதி இரண்டரை மணி எடுத்துக் கொண்டார். உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பு அதிகாரம் ஷரியா நீதிமன்றத்தின் தீர்ப்பு திருமணத்தில் முஸ்லிம் அல்லாத தரப்பினர் ஒருவரை கட்டுப்படுத்தாது என்ற அடிப்படையில் அமைந்ததாகும் என்றார் நீதிபதி.

மலேசியா சமய சார்பற்ற சட்டத்தை கொண்டிருக்கிறது. அதன் கீழ் சிவில் உயர்நீதிமன்றம் வரம்பற்ற நீதிபரிபாலன அதிகாராத்தைப் பெற்றிருக்கிறது. மேலும், அது இயற்பண்புகளுக்கு ஏற்ப ஷரியா நீதிமன்றத்தைக் காட்டிலும் உயர்வானது என்றார்.

Kula-Indra family members4“இதன் அடிப்படையில், தகப்பனார் குழந்தையை குலா & எசோசியேட்ஸ்சிடம் அடுத்த வெள்ளிக்கிழமை மதிய அளவில் ஒப்படைத்தாக வேண்டும்”, என்று நீதிபதி லீ (இடம்) உத்தரவிட்டார்.

இதற்கு முன்னதாக, பத்மநாதனின் வழக்குரைஞர் அனாஸ் பவுஸ்சி நீதிமன்ற அவமதிப்பு உத்தரவை ஆறுKula-Indra family members2 மாதத்திற்கு தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்ட விண்ணப்பத்தை நீதிபதி நிராகரித்ததோடு குழந்தையை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவை பிரப்பித்தார்.

பத்மநாதன் குழந்தை பிரசன்னா டிஸ்காவை ஒப்படைத்தால் மட்டுமே அவமதிப்பு உத்தரவை தள்ளி வைக்க முடியும் என்று நீதிபதி கூறினார்.

2009 ஆம் ஆண்டில் பத்மநாதன் குழந்தை பிரசன்னாவை எடுத்துச் சென்ற போது அது 11 மாதக் குழந்தையாக இருந்தது.

பத்மநாதன் மற்றும் இந்திரா தம்பதிகளின் வயது குறைந்த மூன்று குழந்தைகளும் இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்டிருந்ததை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதி லீ கடந்த ஆண்டில் அளித்திருந்தார்.

அத்தம்பதிகளின் இதர இரு குழந்தைகள், ஒரு 17 வயது மகள் மற்றும் ஒரு 16 வயது மகன், தாயாரின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.

போலீசார் கையைக் கட்டிகொண்டிருக்கக் கூடாது

இதற்கு முன்பு போலவே, பத்மநாதன் இன்றும் நீதிமன்றத்தில் இல்லை என்றாலும் நீதிமன்ற தீர்ப்புக்கு அவர் கட்டுப்பட்டவர் என்று நீதிபதி 1-igpகூறினார்.

சிவில் உயர்நீதிமன்றத்தின் பராமரிப்பு தீர்ப்புப்படி நடந்துகொள்ளாமல் இருப்பதற்கு கணவர் பத்மநாதன் ஷரிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு காரணமாக வைத்துக்கொள்ள முடியாது என்றார் நீதிபதி.

ஷரியா உயர்நீதிமன்றத்தின் பராமரிப்பு உத்தரவு செல்லுபடியாகாது என்றும் நீதிபதி லீ மேலும் உத்தரவிட்டார்.

“வழக்கின் மற்றொரு தரப்பினர் முஸ்லிம் அல்லாததால் பராமரிப்பு உத்தரவு அளிக்கும் அதிகாரம் ஷரியா உயர்நீதிமன்றத்திற்கு இல்லை”, என்றும் நீதிபதி கூறினார்.

சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வேண்டுமென்றே, மனதார கீழ்ப்படிய மறுப்பவர் எவரும் நீதிமன்ற அவமதிப்பு செய்தவராவார் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

நீதிபதி போலீசாருக்கும் உத்தரவிட்டார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பத்மநாதன் கீழ்ப்படியாவிட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், கையைக் கட்டிக்கொண்டு இருக்கக்கூடாது என்றார்.