மலேசியாகினி வாசகர்கள் தெரிவித்திருந்த கருத்துகளை பதிவு செய்ததற்காக அதன் மீது பிரதமர் நஜிப்பும் அம்னோவும் வழக்கு தொடர்ந்துள்ளன. அதற்கான நீதிமன்ற ஆணை இன்று மலேசியாகினியிடம் சார்வு செய்யப்பட்டது.
மலேசியாகினியை வெளியிடும் எம்கினி டோட் கோம் செண்டிரியான் பெர்ஹாட், ஆசிரியர் குழு தலைவர் ஸ்டீபன் கான், தலைமை ஆசிரியர் ஃபதி அரிஸ் ஒமார் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் சக வாதி அம்னோவின் செயல்முறை செயலாளர் அப்துல் ரவுப் யுசோ.
மே 14 ஆம் தேதி மலேசியாகினி வெளியிட்ட “நீங்கள் கூறுவது” என்ற தலைப்பில் நஜிப் மற்றும் திரங்கானு விவகாரங்கள் பற்றிய கட்டுரைகள் அவதூறானவை” என்று வாதிகள் கூறுகின்றனர்.
இவ்வழக்கு ஜூன் 18 இல் நீதிபதி எஸ்எம் கோமதியின் முன் முதல்கட்ட நிர்வாக விசாரணைக்கு வருகிறது.
வழக்கை தீவிரமாக எதிர்க்கும் எண்ணம்
கடந்த மாதம் உத்துசான் மலேசியா மலேசியகினி வாசகர்களை தாக்கி எழுதியிருந்த போதே இவ்வழக்கை எதிர்பார்த்தோம் என்று ஸ்டீபன் கான் கூறினார்.
மலேசியாகினி வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பதில் அளிக்கும் உரிமையை மலேசியாகினி நஜிப்பிற்கு வழங்கிற்கு. ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றார் கான்.
“அவரையும் அம்னோவையும் பற்றிய மலேசியாகினி வாசகர்களின் கருத்துகள் ஏன் தவறானவை என்று அவர் நினைக்கிறார் என்பதற்கு விளக்கம் அளிக்க அவர் வரவேற்கப்பட்டார்”, என்று ஸ்டீபன் கூறினார்.
பிரதமரும் அம்னோவும் அவர்களின் கருத்துகளை தெரிவித்திருக்க வேண்டும். அதனை மலேசியாகினி வெளியிட்டிருக்கும். அதை விடுத்து ஊடகங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தல் ஏன் என்றாரவர்.
நஜிப் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நிராகரித்து விட்டார். கடந்து வியாழக்கிழமை அவர் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இந்த வழக்கை கடுமையாக எதிர்த்தும் போராடும் எண்ணம் கொண்டுள்ளோம்”, என்று ஸ்டீபன் உறுதியாகக் கூறினார்.
“அன்புள்ள பிரதமரே, நீதிமன்றத்தில் சந்திப்போம்!”
மலேசியாகினி பிரதமர் நஜிப்புக்கும் அம்னோவுக்கும் அவர்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு அளித்தோம் என்று கூறிய மலேசியாகினியின் தலைமை ஆசிரியர் ஃபதி, “இதன் காரணமாக கூறுவதற்கு எஞ்சியுள்ளது, ‘அன்புள்ள பிரதமரே, வாருங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம்'” என்பதுதான் என்றார்.
இந்த … தலையன் செக்கிரம…நும்
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இறுதியில் மனிதனை கடிக்கும் என்பது முதுமொழி. அம்னோ எல்லோரையும் பதம் பார்த்து இப்போது மலேசியகினியை பதம் பார்க்க வந்துள்ளது. நமது ஆதரவு என்றும் மலேசியகினிக்கே,
உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் கடப்பாடு தகவல் ஊடகங்களுக்கு இருக்கும் சுகந்திரம் ,ஆனால் நமது நாட்டில் அனைத்தும் மாறுபட்டு கிடக்கிறது ,அரசாங்கத்தின் எதிர்ப்பு செய்திகளுக்கும் ,அரசாங்கத்தின் தவற்றை சுட்டி காட்டும் அல்லது வெளிச்சம் போட்டு காட்டும் தகவல் ஊடகங்களுக்கு சாவு மணி அடிக்க வரிந்து கட்டுவது இந்த நாட்டில் புதியது அல்ல ,மலேசியா கினி இதற்கெல்லாம் பயந்து ஒதுங்கும் ஊடகமும் இல்லை என்பது ஒரு வாசகன் என்ற முறையில் ஆணித்தரமாக சொல்வேன் . அம்னோவின் ஆதரவு பத்திரிகை உத்துசான் மலேசியா ,இந்த நாட்டு மக்களிடையே பல இனவாத கட்டுரைகளை வெளியிட்ட பொது பிரதமர் அதை கண்டிக்க தவறியது ,அவர் சார்ந்த அல்லது அவர் அரசாங்கத்தை ஆதரிக்கும் பத்திரிகைக்கு பச்சை கொடி காட்டி ,அவர் சார்ந்த அரசாங்கத்தை குறை கூரும் தகவல் ஊடகங்களை அதிகார வர்கத்தில் அடக்க நினைப்பது ,இந்த நாட்டின் பத்திரிகை அல்லது தகவல் ஊடகங்களின் சுகந்திரத்துக்கு விடப்பட்ட மிக பெரிய நெருக்கடி ,அல்லது சாபம் என்றே சொல்லலாம் .மலேசியா கினியின் நம்பகத்தன்மையை மக்கள் அறிவார்கள் ,வாசகர்களும் அறிவார்கள் ,நிச்சயம் இந்த வழக்கில் மலேசியா கினி வென்று வராலாறு படைக்கும் .உண்மை என்றும் தோற்காது .
மலேசியாவில் நீதி செத்து விட்டது ,,இனி இந்த நாட்டில் வாழ்வது சரியில்லை ,வெளியேற வேண்டியதுதான்
உண்மையை எழுதினால் ஒக்காளி கசக்கத்தான் செய்யும் டா..!!!
போடா ஆண்டவனே நம்ம பக்கம் ..
நாங்க எப்போதும் உங்க பக்கம் இருப்போம் . வெற்றி நம் பக்கம் தான்
இதனால் தெரிவிப்பது என்ன வென்றால், கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தி யாரையும் ஏசாதிர்கள்! அது நமது கருத்து சுதந்திரத்தை பாதிக்கும்! இனையதல, ஜனநாயக உரிமையை பாதிக்கும். இணையம் இன்று பத்திரிக்கை சுதந்திரத்தின் உச்சம் ! நாம் தப்பு செய்யவில்லை என்றால், நீதிமன்றம் என்ன ? பார்லிமன்றமே செல்லலாம் ! சட்டங்களை நிலை நிறுத்த நீதிமன்றம் என்றால் , சட்டங்களை நிறுவ பர்லிமன்றம்! புரிந்து கொள்வோமா நமது சுதந்திரத்தை ?
பிரதமருக்கு நன்றி கூறுங்கள். மலேசியாகினி மீது வழக்கு தொடர்வதால், இந்த இணைய ஊடகத்திற்கு மேலும் விளம்பரம் கூடுமே தவிர, குறையாது. இவ்வழக்கில் பிரதமருக்கான செலவுத் தொகையை மலேசியக்கினி செலுத்தவேண்டும் என நீதிமன்றம் தீர்பளிக்குமேயானால், அந்தத் தொகையினை வாசகர்கள் செலுத்தவேண்டும். இப்படி செய்தால் எதிர்காலத்தில் எவரும் ஊடகங்கள் மீது வழக்கு தொடர்வது குறையும்.
நமது அரசாங்கத்தில் குறைகள் இருந்தால் அதனை சுட்டிகா ட்டுவதற்க்கு மலேசியக் குடிமக்களுக்கு உரிமை உண்டு,இதனை மலேசிய கூட்டரசு அரசியல் அமைப்பில் உள்ள 10 வது உறுப்பில் குறி ப்பிடபட்டுள்ளது.குடிமக்கள் அனைவருக்கும் சிந்தனை வெளியீட்டு சுதந்திரம் உள்ளது.
மலேசியாவில் கருத்து சுதந்திரம் மெல்ல செய்துகொண்டு இருந்தது இப்போது அதற்கு சாவு மணி அடிக்க போகிறார்கள்
என்ன செய்வது நைனா .