ஸாரினாவை நீதிமன்றத்திற்கு போகச் சொல்வது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும்

 

DAP-Nga-Zarinaதாம் ஒரு முஸ்லிம் அல்ல என்ற ஒரு ஷரியா நீதிமன்ற பிரகடனத்தைப் பெற்று வருமாறு தேசிய பதிவு இலாகா ஸாரினா அப்துல் மஜிட்டுக்கு ஆலோசனை கூறியிருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது.

இதற்கு காரணம் அரசமைப்புச் சட்டம் ஒருவர் தமது சமயத்தை தேர்வு செய்துகொள்வதற்கு அனுமதிக்கிறது என்று பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கே கூ ஹாம் கூறினார்.

நீதிமன்றத்தின் பிரகடனத்தைக் கோருவது அரசமைப்புச் சட்டப் பிரிவு 11(1) ஐ மீறுவதாகும், ஏனென்றால் இது ஒருவரின் சமயத்தை முடிவு செய்யும் முடிவு மூன்றாம் தரப்பினரிடம் விடப்பட்டுள்ளதைக் குறிக்கிறது என்றாரவர்.

இதற்கு ஒரு சாதாரண சத்தியப்பிரமானம் போதுமானதாகும் என்று அவர்  மேலும் கூறினார்.

“ஒருவர் தேர்வு செய்துள்ள சமயம் அல்லது தனிப்பட்ட சமய நம்பிக்கையை நிருபிக்க சத்தியப்பிரமாணம் போதுமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் தேசிய பதிவு இலாகாவை கேட்டுக்கொள்கிறேன்”, என்று இங்கே ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

 

TAGS: