2014 பட்ஜெட்டில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இரவுநேரச் சந்தை வியாபாரிகளின் சலுகைக் கடனுதவித் திட்டத்துக்கு ரிம100 மில்லியன் ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அப்படி ஒதுக்கப்பட்ட பணம் எங்கிருக்கிறது என்பதுதான் தெரியவில்லை என டிஏபி-இன் ஆயர் குரோ சட்டமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் கூறினார்.
“கடந்த ஆண்டு டிசம்பரில் பட்ஜெட் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து இன்றுவரை அத்திட்டம் தொடங்கப்படாதிருக்கிறது.
“பிஎஸ்என்(பேங்க் சிம்பானான் நேசனல்)-னைக் கேட்டால் பணம் வந்துசேரவில்லை, அதனால் கடனளிக்கும் திட்டத்தைத் தொடங்கவில்லை என்கிறது”, என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அப்படியானால் வாக்களிப்பட்ட ரிம100 மில்லியன் எங்கு போனது? நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றா?”, என்று கூ வினவினார்.
வரும் ஆனா வராது ?
அது rosmah மவனுக்கும் மட்டுமே கப்சுப் வாய் திறக்காதே c4 bom உன் உடல் அப்புறம் சாம்பலாயிடும் கவனம் மச்சி
ஊ… ஊ… ஊ…