சிலாங்கூரிலும் பினாங்கிலும் சமய அதிகாரிகள் அதிகார ஆணவத்துடன் நடந்துகொண்டிருப்பதாக எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் குறைகூறினார்.
“மற்ற இனத்தாரை இழிவுபடுத்துவதுபோன்ற தோற்றத்தை உருவாக்க வேண்டாம்”, என்றவர் எச்சரித்தார்.
சிலாங்கூர் இஸ்லாமிய துறை (ஜாயிஸ்) இந்து திருமணம் ஒன்றைத் தடுத்து நிறுத்திய சம்பவம் பற்றியும் பினாங்கில் சமய அதிகாரிகள், மதமாறிய சீனர் ஒருவர் சீனர் வழக்கப்படி அடக்கம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தியதைப் பற்றியும் கருத்துரைத்தபோது அன்வார் இவ்வாறு கூறினார்.
matham ! ivargal mathathai kapaatrubavargal alla! matham ( veri ) piditha yanaigal !
இவர்களின் அட்டூழியங்களுக்கு ஆதரவாக கூடிய விரைவில் போலிஸ் வேற!!!!
நமது நாட்டின் இஸ்லாம் இலாகாவின் போதனைகள் என்னவென்றல் இஸ்லாம் மதத்திற்கு எதிர்ப்பாக வாழலாம் அனால் இறந்த பிறகு இஸ்லாமாக அடக்கம் செய்ய வேண்டும் .அப்படி இறந்தவர் பெயரில் சொத்துக்கள் எதும் இருந்தால் 3/4 பங்கை பைட்துமல் எடுத்து கொள்ளும் .அந்த பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்கமாட்டார்கள் .
மாநில அரசை விட இஸ்லாமிய துறை (ஜாயிஸ்) அதிகாரம் படைத்ததா? நம்பற மாதிரி தெரிலையே…………….
ஒருவர் மதம் மாற நினைத்தால் இவர்கள்லே மதம் மாற நினைப்பவர்களில் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிய படுத்தலாமே சுடுகாடுக்கு போகும் வரை வாய் மூடி மௌன மாக இருந்து விட்டு இறந்தவுடன் (ஜாயிஸ்) இவர்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது . இந்த தில்லு முள்ளு காராகளாலே நான் 6 மாதத்திற்கு ஒருமுறை J P N நான் என் I C சரி பார்த்துகொள்கிறேன் . குறிப்பாக ஆண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் இதில் கவனமாகவே இருக்க வேண்டும் . காரணம் முதலில் பலியிடபடுவது இவர்களே .இனி வரும் காலங்களில் பிறந்த சூர எடுக்கும் போது தயவு செய்து இனம் மதம் எனும் கட்டத்தை நிரப்புங்கள் . சிலர் இதை கவனிப்பதே கிடையாது .