பெற்றோரில் ஒருவர் மதமாறும்போது குழந்தைகளைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு என்ற சர்ச்சைக்குத் தீர்வுகாண வழி உண்டு என்கிறார் தலைமை நீதிபதி அரிபின் ஜக்கரியா.
ஆனால், அதைத் தெரிவிக்க அவர் தயாராக இல்லை.
“வழிமுறைகளைச் சொல்ல என்னால் முடியாது. அப்படிச் செய்தால் நான் ஆலோசனை வழங்குவதாகக் கருதப்படும்”, என்றவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“சம்பந்தப்பட்ட தரப்பினர் அவர்களின் உரிமைகளுக்காக போராடலாம். ஒருவர் (சிவில் நீதிமன்ற ஆணைக்கு) கீழ்ப்படியவில்லை என்கிறபோது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்”என அரிபின் குறிப்பிட்டார்.
நீதியைத் தேடி அலைபவர்களெல்லாம் நீதிபதியைத் தேடாதீர்கள்?. அநீதிபதியை தேடுங்கள். காரியம் சுலபமாக முடிந்து விடும்.
குழந்தைகளை பராமரிக்கும் உரிமை தாய்க்கே உண்டு, இது காலாகாலமாக உலகமெங்கும் நடந்துவரும் வழிமுறையாகும். இதில் சொடுக்கு கிடுக்கு போடும் புதிய தந்திரங்கள் வேண்டாம்??அதற்க்கு ஒரு புது நியதியை கொண்டு வரவேண்டாம், எங்கக் கலாச்சாரப்படி எப்படியோ அப்படியே நடக்கட்டும்,யாருடைய புதிய தலையீடும் வேண்டாம்,, நன்றி.
தலைமை நீதிபதியே தடுமாறுகிறார் . தண்டோராபோடுபவர்கள் என்ன செய்வார்கள்?
என்ன செய்யவேண்டியது எங்களுக்கு தெரியாதா ?
பாம்புக்கு தலை , மீனுக்கு வால் ,நன்றாக இருக்கிறது உங்கள் தீர்ப்பு