ஐஜிபி-இன் நடுநிலை போக்கைச் சாடுகிறார் இந்திராவின் வழக்குரைஞர்

sivaஎம்.இந்திரா  காந்தியின்  வழக்குரைஞர்களில் ஒருவரான  ஏ.சிவநேசன்,  வெவ்வேறு  சமயத்தவருக்கிடையில்  குழந்தை பராமரிப்புமீது  எழும்  சர்ச்சைகளில்  போலீஸ்  நடுவுப்பாதையைக்  கடைப்பிடிக்கும்  என்று  கூறிய  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரைச்  சாடினார்.

போலீசின் நிலைப்பாடு  சட்டமீறலாகும்  என  சுங்கை  சட்டமன்ற  உறுப்பினருமான  சிவநேசன்  கூறினார்.

“புகார்  செய்யப்பட்டதும்  விசாரணை  செய்வதும்  விசாரணை  அறிக்கையைச்  சட்டத்துறைத்  தலைவரிடம்  ஒப்படைப்பதும்தான்  போலீசின்  வேலையாகும்”,என  அவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

முன்னதாக,  குழந்தை  பராமரிப்பு  விவகாரத்தில்  ஷியாரியா,  சிவில்  நீதிமன்றங்கள்  வழங்கும்  தீர்ப்புகள்  முரண்படும்போது போலீஸ்  இரண்டு தீர்ப்புகளையும்  செயல்படுத்தாது  என்றும்  நடுவுப்பாதைக்  கடைப்பிடிக்கும்  என்றும்  ஐஜிபி  கூறி  இருந்தார்.

ஐஜிபி-இன் நிலைப்பாட்டை  மறுதலித்த  சிவநேசன்  போலீஸ்  நீதிமன்ற  உத்தரவுப்படிதான்  நடக்க  வேண்டும்  என்றார்.