வரம்பு மீறிய ஐஜிபியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்

 

igpமத மாற்ற விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளின் பராமரிப்பு குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாத போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட வேண்டும்.

எது நியாயம் என்பதை தாம் நிர்ணயிக்கலாம் என்று காலிக் நினைப்பாரானால், அவர் அவரது அதிகார வரம்பை மீறியதோடு நீதித்துறையின் அதிகாரத்தையும் தமது கையில் எடுத்துக்கொண்டுள்ளார் என்பதாகும் என்று டிஎபி கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“நீதிமன்ற உத்தரவை அமலாக்க நீதிமன்றத்திற்கு உதவுவது போலீசின் கடமை.

“இரு நீதிமன்றங்களின் உத்தரவை அவர்கள் அமல்படுத்தப்போவதில்லை என்றும், இரு குழந்தைகளையும் குழந்தை பராமரிப்பு இல்லத்தில் வைப்போம் என்றும் ஐஜிபி பகிரங்கமாக கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

“நமது நீதிபரிபாலன அமைவுமுறைய ஐஜிபி கேலிக்கூத்தாக்கி இருக்கிறார்”, என்று தியோ அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

TAGS: