அடுத்து ‘வேட்டை’க்குப் போகும்போது உடன் வருக: சுரேந்திரனுக்கு போலீஸ் அழைப்பு

கிண்டலா, கேலியா தெரியவில்லை.  ஆனால், அடுத்த தடவை போலீஸ் குற்றவாளிகளுடன் துப்பாக்கிச் சூட்டுக்களைப் பரிமாறிக்கொள்ளும்போது அதைக் காண பிகேஆர் எம்பி என்.சுரேந்திரன் வர வேண்டும் என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் அழைத்திருக்கிறார். நேற்றிரவு, டிவிட்டரில் காலிட் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இதற்கு பிகேஆர் உதவித்…

ஐஜிபி: கூட்டம் அமைதியாக நிகழும் வரையில் அனுமதி தேவையில்லை

எந்த ஒரு கூட்டமும் 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி  செய்ய வேண்டும் என தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் தெளிவுபடுத்தியுள்ளார். அந்த நிபந்தனைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் அது அமைதியான கூட்டமாக இருப்பதை ஏற்பாட்டாளர்கள்  உறுதி செய்ய வேண்டும் என்பதும் அடங்கும். எந்த…

நேர்மையாக நடந்து கொள்ளுமாறு ஒசிபிடி-களுக்கு ஐஜிபி அறிவுரை

போலீஸ் படையின் நேர்மையை நிலை நாட்டும் பொருட்டு தேர்தல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எந்தத்  தரப்பு பக்கமும் சாய வேண்டாம் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் எல்லா மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கும் (ஒசிபிடி) அறிவுரை கூறியுள்ளார். "தேர்தல்களின் போதும் போலீசாரின் பங்கும் கடமையும் வழக்கமானதே- அதாவது அமைதி,…

இணைய ‘பொய்த் தகவல்களை’ முறியடிக்கப் போலீஸ் 500 ஆயிரம் ரிங்கிட்டை…

இணையத்தின் வழியாக பரப்பப்படும் 'பொய்யான தகவல்களை' முறியடிக்க ஆறு மாதங்களில் போலீஸ் படை   500,000 ரிங்கிட்டை செலவு செய்துள்ளது. "போலீஸ் படையின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட அவதூறான குற்றச்சாட்டுக்கள் போன்ற இணையத்தில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை முறியடிக்கும் பொருட்டு நமது  போலீஸ் அதிகாரிகளின் ஆற்றலை மேம்படுத்த…

ஐஜிபி: ‘புதிய ஆதாரம் இருந்தால் மட்டுமே பாலாவின் இரண்டாவது சத்தியப்…

புதிய ஆதாரம் இருந்தால் மட்டுமே தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம், பொய்யான சத்தியப்  பிரமாணத்தை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார் எனக் கூறப்படுவது மீது போலீஸ் புலனாய்வுகளை  மீண்டும் தொடங்கும் எனத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இஸ்மாயில் ஒமார் கூறுகிறார். அந்த விவகாரம் இன்னொரு வழியில் மறுபதிப்பாக வெளியானாலும்…

போலீசார்: லஹாட் டத்து இழுபறி கட்டுக்குள் இருக்கிறது

லஹாட் டத்துவில் ஊருருவியுள்ள ஆயுதமேந்திய நபர்களை வெளியேற்றுவதற்கு தாங்கள் உறுதியாகச் செயல்படவில்லை எனக் கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர். "நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்," என அவர்கள் வலியுறுத்தினர். "நீங்கள் ஊகங்களை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என நான்…

பெர்சே தலைவர்களுக்குத் தொந்திரவா? குடிநுழைவுத்துறையைக் கேளுங்கள் : ஐஜிபி

கடந்த ஒரு மாதமாக பெர்சே தலைவர்கள் வெளிநாடு செல்ல முற்படும் வேளையில் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படுவது பற்றி வினவியதற்குக் குடிநுழைவுத் துறையிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும் என்று போலீஸ் கூறியது. இன்று காலை புக்கிட் அமானில், இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் அவ்வாறு கூறினார்.…

பதின்மவயதினர் விலங்கிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துணை அமைச்சர் ஐஜிபிக்குக் கடிதம்

இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் கான் பிங் சியு, பிரதமரின் புகைப்படத்தைக் காலில் போட்டு மிதித்ததாகக் கூறப்படும் 19-வயது ஒங் சின் ஈ-க்குப் போலீஸ் விலங்கிட்டு வைத்திருந்ததற்கு ஆட்சேபணை தெரிவித்து போலீஸ் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்குக் கடிதம் எழுதுவார். போலீஸ், அவர்களின் நடைமுறைகளை (எஸ்ஓபி), குறிப்பாக பெண்கள்,பதின்ம வயதினர்,…

குற்றப் புள்ளிவிவரங்களைத் தில்லுமுல்லு செய்வது பெரிய பாவம் என்கிறார் ஐஜிபி

குற்றச் செயல்கள் மீதான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கான புள்ளி விவரங்களை  ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் தற்காத்துப் பேசியிருக்கிறார். அந்தப் புள்ளி விவரங்களில் தில்லுமுல்லு எதுவும் செய்யப்படவில்லை என அவர் வலியுறுத்தினார். "என் பதவிக் காலத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக்…

ஐஜிபி: டாட்டாரான் மெர்டேகாவுக்கு மஞ்சளடிக்க வேண்டாம்

மெர்டேகா கவுண்ட்டவுன் நிகழ்வையும் மெர்டேகா கொண்டாட்டங்களையும் அரசியலாக்க வேண்டாம் என்று போலீஸ், பெர்சே-தொடர்பு என்ஜிஓ-களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. “அதை அரசியல் விவகாரம் ஆக்க வேண்டாம்.மலேசிய மக்களாகிய நாம் 55ஆம் ஆண்டு மெர்டேகாவை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்”, என்று  தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று கூறினார். 26…

அடையாள அட்டையைத் திருப்பித் தருக: ஐஜிபிக்கு வேதா கோரிக்கை

இந்திய மலேசியர்களிடையே ஓர் எழுச்சியை உண்டாக்கிய இண்ட்ராபின் தலைவர் என்ற போதிலும் பி.வேதமூர்த்தி, இன்றைய நிலையில் ஒரு நாடற்ற மலேசியர் போன்றுதான் இருக்கிறார். நான்கு ஆண்டுகள் பிரிட்டனில் நாடுகடந்து வாழ்ந்துவிட்டு ஆகஸ்ட் முதல் நாள் மலேசியா திரும்பி வந்த வேதமூர்த்தி, மைகார்ட் உள்பட தமக்குச் சொந்தமான  100 ஆவணங்கள்…

ஐஜிபி: EO கைதிகள் விடுவிக்கப்பட்டதைக் குற்றவிகித அதிகரிப்புடன் தொடர்புப்படுத்தாதீர்

அவசரகாலச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதுதான் நாட்டில் குற்றச்செயல் அதிகரிப்புக்குக் காரணம் என்று தேவையில்லாமல் ஊகம் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் கேட்டுக்கொண்டிருக்கிறார். “ஊகம் கூறுதல் வேண்டாம்.அது(குற்றவிகிதம்)கட்டுப்பாட்டில் இருக்கிறது.நாங்கள் நிலவரத்தைக் கண்காணித்து வருகிறோம்”, என்று செராசில் செய்தியாளர் கூட்டமொன்றில்…

IGP லண்டனில் காலமாகி விட்டதாக கூறும் வதந்திகளை ஹிஷாம் வன்மையாகச்…

IGP என அழைக்கப்படும் தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் லண்டனில் இறந்து விட்டதாகக் கூறும் வதந்திகளை உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் வன்மையாகக் கண்டித்துள்ளார். பிரிட்டிஷ் போலீசாருடன் சம்பந்தப்பட்ட அதிகாரத்துவ விவகாரங்களுக்காக இஸ்மாயில் லண்டனுக்கு சென்றுள்ளார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் பிப்ரவரி 2ம்…

ஐஜிபி: கிறிஸ்மஸ் கேரோல் பவனியா? போலீஸ் அனுமதி பெறுங்கள்

கிறிஸ்மஸ் நாளான டிசம்பர் 25 இல் கிறிஸ்மஸ் கேரோல் ஊர்வலம் நடத்த விரும்புகிறவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலுள்ள மாநில போலீஸ் நிலையங்களில் அனுமதிக்கு மனு செய்யுமாறு போலீஸ் ஆலோசனை வழங்கியுள்ளது. சமய நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி மனு செய்ய வேண்டியது முன்பு கட்டாயமானதல்ல. ஆனால், பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஏற்பாட்டாளர்கள்…

ஐஜிபி: குற்றச் செயல்களைக் குறைக்க எங்களுக்கு வழி சொல்லுங்கள்

நாட்டில் குற்றச் செயல்களைக் குறைப்பதற்கு புதிய யோசனைகளையும் பரிந்துரைகளையும் போலீஸுக்கு வழங்குமாறு தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி)இஸ்மாயில் ஒமார் பொது மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். பொது மக்கள் அந்த யோசனைகளை சம்பந்தப்பட்ட மாநில அல்லது மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கு அல்லது போலீஸ் பொது உறவு அதிகாரிகளுக்கு அனுப்பலாம்.…