இணைய ‘பொய்த் தகவல்களை’ முறியடிக்கப் போலீஸ் 500 ஆயிரம் ரிங்கிட்டை செலவு செய்துள்ளது

policeஇணையத்தின் வழியாக பரப்பப்படும் ‘பொய்யான தகவல்களை’ முறியடிக்க ஆறு மாதங்களில் போலீஸ் படை   500,000 ரிங்கிட்டை செலவு செய்துள்ளது.

“போலீஸ் படையின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட அவதூறான குற்றச்சாட்டுக்கள் போன்ற இணையத்தில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை முறியடிக்கும் பொருட்டு நமது  போலீஸ் அதிகாரிகளின் ஆற்றலை மேம்படுத்த 2012ம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மட்டும் 500,000  ரிங்கிட்டை நாங்கள் செலவு செய்துள்ளோம்,” என தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார்  கூறியிருக்கிறார்.

அத்துடன் இன மோதல்கள் பற்றிய தவறான தகவல்கள் போன்ற பொது ஒழுங்கிற்கு பாதகமான இணையத்
தகவல்களை முறியடிக்கும் நோக்கத்தையும் அந்தச் செலவுகள் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

என்றாலும் போலீஸ் தனக்கு எதிரான குறை கூறல்களை ஏற்றுக் கொள்கிறது என்றும் அது தன்னை
மேம்படுத்திக் கொள்வதற்கு அவை உதவுகின்றன என்பதையும் இஸ்மாயில் ஒப்புக் கொண்டார்.

“மக்கள் எங்களை குறை கூறுகின்றனர். நாங்கள் மேம்படுத்திக் கொள்கிறோம். நாங்கள் அதனைச் செய்கிறோம்.  நாங்கள் ஊழலாக இருப்பதாக நீங்கள் சொல்கின்றீர்கள். நாங்கள் உருமாற்றத் திட்டத்தை கொண்டு வந்தோம்.  காரணம் போலீஸ் படைக்கு நேர்மை மிக முக்கியமானதாகும். நாங்கள் மாறுகிறோம். ஆனால் அதற்குக் காலம்  பிடிக்கும்.”

மார்ச் 25ம் தேதி அனுசரிக்கப்படவிருக்கும் 206வது போலீஸ் தினத்தை ஒட்டி நிருபர்களுக்கு அளித்த
பேட்டியில் இஸ்மாயில் அவ்வாறு கூறினார்.police1

“2012ல் குற்றச் செயல் விகிதத்தை ஐந்து விழுக்காடாக குறைக்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் 7.6
விழுக்காட்டை சாதித்துள்ளோம். சாலைக் குற்றங்களைப் பொறுத்த வரையில் 45 விழுக்காடு குறைக்க
எண்ணியிருந்தோம். ஆனால் 41.3 விழுக்காட்டை அடைந்து விட்டோம்.”

பொதுத் தேர்தல் நெருங்கி வருவதைக் குறிப்பிட்ட இஸ்மாயில் அரசியல் களத்தில் இரு புறமும் உள்ள
ஆதரவாளர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

“இடையூறுகள் ஏற்படும் சூழ்நிலைகளில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். என்றாலும் இடையூறுகள் இல்லாமல்  இருந்தால் மிகவும் நல்லது.”

“கட்சி ஆதரவாளர்கள் ஆதரவைத் தெரிவிக்கும் போது நியாயமாகவும் பொறுப்பாகவும் நடந்து கொள்ள
வேண்டும். எல்லோரும் பொறுப்புடன் நடந்து கொண்டால் எந்தப் பிரச்னையும் எழாது,” என்றும் இஸ்மாயில்
சொன்னார்.

போலீஸ் தினக் கொண்டாட்டங்கள் திங்கட்கிழமை நிகழும் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் போலீஸ்
படைக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுப்பார் என்றும் இஸ்மாயில் தெரிவித்தார்.

 

TAGS: