எந்த ஒரு கூட்டமும் 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்த நிபந்தனைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் அது அமைதியான கூட்டமாக இருப்பதை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதும் அடங்கும்.
எந்த ஒரு கூட்டத்துக்கும் போலீஸ் அனுமதி தேவை என நேற்றிரவு ஊடகங்களில் வெளியான தகவல்களை இஸ்மாயில் மறுத்தார்.
“ஏற்பாட்டாளர்கள் மாவட்ட போலீஸ் அதிகாரியைச் சந்தித்து தகவல் கொடுத்தால் போதும், கூட்டத்தை நடத்த
முடியும். அந்தக் கூட்டம் சட்டத்திற்கு எதிரானது அல்ல. அது அமைதியாகவும் எந்த ஆயுதங்களும்
இல்லாமலும் நடத்தப்பட வேண்டும்.”
“தேச நிந்தனையான, தூண்டக் கூடிய எந்தச் சொற்களும் இருக்கக் கூடாது. அது அமைதியாக இருக்க
வேண்டும்,” என புக்கிட் அமான் பொது உறவு அதிகாரி ஏசிபி ராம்லி முகமட் யூசோப் ஒர் அறிக்கையில்
தெரிவித்தார்.
போலீஸ் பொது உறவுப் பிரிவின் உதவி இயக்குநருமான ராம்லி ஊடகங்களில் வெளியான பல தவறான செய்திகளைச் சுட்டிக் காட்டினார்.
ஒரு கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி தேவை என ஐஜிபி சொல்லவில்லை என்றார் அவர்.
ஐஜிபி சொன்னதிலிருந்து அனுமதி தேவை இல்லை என்பது தெளிவாகியுள்ளதாகவும் ராம்லி சொன்னார். இஸ்மாயிலுடைய அறிக்கை மீது நேற்று ஊடகங்களில் வெளியான தவறான தகவல்களைச் சரி செய்வதற்காக இந்த விளக்கம் அளிக்கப்படுகின்றது என்றார் அவர்.
எதிர்த்தரப்பு நாளைக்கு ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கு விண்ணப்பிக்கவில்லை என்பதால் அந்தக் கூட்டம் சட்ட விரோதமானது என்று செவ்வாய்க்கிழமை பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதனால் பேரணி பங்கேற்பாளர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அவை எச்சரித்தன.
சட்டத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி.
மக்கள் சக்திக்கு போலிஸ் மரியாதை கொடுக்க வேண்டும்.சட்டத்தை அவர்களும் மதிக்க வேண்டும்.பொது ஒழுங்கு காவலனாக மட்டும் செயல்பட வேண்டும். அதிகாரம் மட்டும் இருக்கிறது என்பதற்காக ஆடக்கூடாது.