ஐஜிபி: டாட்டாரான் மெர்டேகாவுக்கு மஞ்சளடிக்க வேண்டாம்

மெர்டேகா கவுண்ட்டவுன் நிகழ்வையும் மெர்டேகா கொண்டாட்டங்களையும் அரசியலாக்க வேண்டாம் என்று போலீஸ், பெர்சே-தொடர்பு என்ஜிஓ-களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

“அதை அரசியல் விவகாரம் ஆக்க வேண்டாம்.மலேசிய மக்களாகிய நாம் 55ஆம் ஆண்டு மெர்டேகாவை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்”, என்று  தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று கூறினார்.

26 பெர்சே ஆதரவு என்ஜிஓ-கள், தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்கு உறுதிகூறிய அரசாங்கம் அதை நிறைவேற்றாமலிருப்பதை நினைவுறுத்த மஞ்சள் உடை அணிந்து கவுண்ட்டவுன் நிகழ்வில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருப்பதைக் கருத்தில்கொண்டே இஸ்மாயில் இவ்வாறு கூறினார்.

அந்த என்ஜிஓ-கள், Janji Bersih (தூய்மையான வாக்குறுதி) என்னும் தலைப்பில் டாட்டாரான் மெர்டேகாவில் மாற்று மெர்டேகா தின கவுண்ட்டவுன் நிகழ்வு ஒன்றைத் திட்டமிட்டுள்ளன.அதில் கலந்துகொள்வோர், தேர்தல் சீரமைப்புக்கான போராட்டத்தைக் குறிக்க மஞ்சள் உடைகளில் வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

TAGS: