ஐஜிபி: கிறிஸ்மஸ் கேரோல் பவனியா? போலீஸ் அனுமதி பெறுங்கள்

கிறிஸ்மஸ் நாளான டிசம்பர் 25 இல் கிறிஸ்மஸ் கேரோல் ஊர்வலம் நடத்த விரும்புகிறவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலுள்ள மாநில போலீஸ் நிலையங்களில் அனுமதிக்கு மனு செய்யுமாறு போலீஸ் ஆலோசனை வழங்கியுள்ளது.

சமய நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி மனு செய்ய வேண்டியது முன்பு கட்டாயமானதல்ல. ஆனால், பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஏற்பாட்டாளர்கள் அனுமதி பெற மனு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் இஸ்மாயில் ஒமார் கூறினார்.

“நாங்கள் இசைவிணக்கம் உடையவர்கள். ஆனால், அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தால் நல்லது. எங்களுக்குத் தெரியப்படுத்துவதின் வழி, நாங்கள் ஊர்வலத்தை வழிநடத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு போக்குவரத்தையும் கட்டுப்படுத்த இயலும் என்று அவர் இன்று கூறினார்.

-பெர்னாமா

TAGS: