செராஸ் மற்றும் மீரியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது

இன்று காலை 10.30 மணி நிலவரப்படி, செராஸ், கோலாலம்பூர் மற்றும் சரவாக், மீரி ஆகிய இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.

சுற்றுச்சூழல் துறை செராஸில் 131 ஆகவும், மிரியில் 124 ஆகவும் காற்று மாசுபடுத்தும் குறியீட்டு அளவீட்டைப் பதிவு செய்தது.

நாட்டின் பிற பகுதிகளில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலேயே உள்ளது.

50 க்கும் குறைவான குறியீட்டு எண்ணிக்கை நல்ல காற்றின் தரத்தைக் குறிக்கிறது, 51-100 மிதமானது, 101-200 ஆரோக்கியமற்றது, 201-300 மிகவும் ஆரோக்கியமற்றது மற்றும் 300 க்கு மேல் ஆபத்தானது.

இந்தோனேசியாவிலிருந்து நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதிக்குள் நுழையும் புகை மற்றும் மூடுபனியின் இயக்கத்தால் காற்றின் தரம் மோசமடைந்ததாகத் துறை முன்பு கூறியது.

 

 

-fmt