குற்றப் புள்ளிவிவரங்களைத் தில்லுமுல்லு செய்வது பெரிய பாவம் என்கிறார் ஐஜிபி

குற்றச் செயல்கள் மீதான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கான புள்ளி விவரங்களை  ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் தற்காத்துப் பேசியிருக்கிறார். அந்தப் புள்ளி விவரங்களில் தில்லுமுல்லு எதுவும் செய்யப்படவில்லை என அவர் வலியுறுத்தினார்.

“என் பதவிக் காலத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் காட்டுவதற்காக புள்ளிவிவரங்களில் தில்லுமுல்லு செய்தால் நான் பெரிய பாவம் செய்தவனாகி விடுவேன்.”

“அந்தப் புள்ளிவிவரங்கள் தில்லுமுல்லு செய்யப்பட்டுள்ளன என்பதை என்னிடம் நிரூபியுங்கள். அதனைச் செய்தவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்கிறேன்.”

“அதனை தில்லுமுல்லு செய்ததாகக் கண்டு பிடிக்கப்படுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நான் குறை கூறப்படுவதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஏதாவது சரி இல்லை என்றால் மக்களும் அரசியல்வாதிகளும் என்னையோ அல்லது மாநில போலீஸ் தலைவர்களையோ சந்திப்பதற்கு வரவேற்கப்படுகின்றனர்,” என இஸ்மாயில் இன்று கூறினார்.

அதிகம் பரபரப்பாக பேசப்படும் குற்றச் சம்பவங்கள் இருப்பதைக் குறிப்பிட்ட அவர், போலீசார் அவற்றை புலனாய்வு செய்து வருகின்றனர் எனச் சொன்னார்.

குற்றப் புள்ளிவிவரங்கள் குறிப்பாக அட்டவணைக் குற்றங்கள், அட்டவணை அல்லாத குற்றங்கள் எண்ணிக்கை தில்லுமுல்லு செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி வினவப்பட்ட போது ஐஜிபி அவ்வாறு கூறினார்.

TAGS: