அவசரகாலச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதுதான் நாட்டில் குற்றச்செயல் அதிகரிப்புக்குக் காரணம் என்று தேவையில்லாமல் ஊகம் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“ஊகம் கூறுதல் வேண்டாம்.அது(குற்றவிகிதம்)கட்டுப்பாட்டில் இருக்கிறது.நாங்கள் நிலவரத்தைக் கண்காணித்து வருகிறோம்”, என்று செராசில் செய்தியாளர் கூட்டமொன்றில் இஸ்மாயில் தெரிவித்தார்.
இஓ கைதிகள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களை போலீஸ் தொடர்ந்து கண்காணிப்பதாகவும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.