பிகேஆர், சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய காப்பார் முன்னாள் எம்பி எஸ்.மாணிக்கவாசகத்தின் இடைநீக்கத்தை மீட்டுக்கொண்டிருக்கிறது.
அவரது விளக்கத்தைக் கேட்ட பிறகு கடும் எச்சரிக்கை விடுத்தால் போதுமானது என்று முடிவு செய்து அவரது இடைநீக்க உத்தரவு உடனடியாக மீட்டுக்கொள்ளப்பட்டது என பிகேஆர் ஒழுங்குநடவடிக்கைக் குழுத் தலைவர் டான் கீ கொவோங் கூறினார்.
சிலாங்கூர் தலைவர் பதவிக்கு காலிட்டை எதிர்த்துப் போட்டியிடும் மாணிக்கவாசகம், கட்சித் தேர்தலில் காலிட் பண அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார் என பெர்னாமா அறிவித்திருந்தது.
கட்சித் தேர்தல்களில் முறைகேடுகள், வன்முறைகள் நடப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதன் விளைவாக சிலாங்கூரில் கோலா சிலாங்கூர் தொகுதி உள்பட பல இடங்களில் கட்சித் தேர்தல்கள் இரத்து செய்யப்பட்டன.
அத்தேர்தல்களுக்கான மறு-வாக்களிப்பு, வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் எனவும் டான் ஓர் அறிக்கையில் கூறினார்.
மணிக்கா மீண்டு வந்தது நல்லது. கருத்து வேறுபாடு மறந்து PR வெற்றிக்கு பாடுபடுங்கள். குறை கூறிய MIC BN வெட்கி தலை குனிய வேண்டிய நேரம் இது,