நிறுவன முன்னாள் இயக்குநருக்கு 1,942 ஆண்டுகால சிறைத் தண்டனை

 

Jailஒரு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர், லிம் லோங் இயு, 43, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் புரிந்த 481 குற்றங்களுக்கு இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு மொத்தம் 1,942 ஆண்டுகால சிறைத் தண்டனையும் ரிம1.596 மில்லியன் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

அந்நிறுவனத்தின் இன்னொரு முன்னாள் இயக்குநர், லியோங் குவான் இயு, 47, புரிந்த அதே போன்ற குற்றங்களுக்கு அந்நீதிமன்றம் மொத்தம் 139 ஆண்டுகால சிறைத் தண்டனையும், ரிம180,000 அபராதமும் விதித்தது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜக்ஜிட் சிங் பந்த் சிங் அரசு தரப்பின் குற்றச்சாட்டிற்கு எதிராகத் தற்காப்பு தரப்பு நியாயமான சந்தேகத்தை எழுப்பத் தவறி விட்டது என்றார்.

ஆனால், நீதிமன்றம் விதித்துள்ள தண்டனைகளை குற்றவாளிகள் ஒரே சமயத்தில் அனுபவிப்பார்கள் என்பதால், லிம் இன்றைய தினத்திலிருந்து மொத்தம் 10 ஆண்டுகாலத்திற்கு மட்டுமே சிறையிலடைக்கப்பட்டிருப்பார்.

அவ்வாறே, லியோங்கும் மொத்தம் இரண்டு ஆண்டுகளுக்குத்தான் சிறையிலிருப்பார்.