ஏஜி: பைபிள் விவகாரத்தில் வழக்கு இல்லை; ஜாயிஸ் “செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்”

 

மலேசிய பைபிள் மன்றத்திலிருந்து கடந்த ஜனவரியில் கைப்பற்றப்பட்ட பைபிள் பிரதிகள் சம்பந்தமாக அரசாங்கம் வழக்குத் Bibleதொடரப்போவதில்லை என்று சட்டத்துறை தலைவர் அலுவலகம் இன்று (ஜூன் 11) கூறியது.

அந்த வழக்கு இப்போது மூடப்பட்டு விட்டது என்று சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயில் இன்று கூறினார்.

அவர் தெளிவாக கூறவில்லை என்ற போதிலும், கைப்பற்றப்பட்ட பைபிள் பிரதிகளை திருப்பித் தருமாறு சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகாவுக்கு (ஜாயிஸ்) அப்துல் கனி உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

மேலும், அந்த புனிதப் புத்தகங்கள் பாதுகாப்புக்கு மிரட்டல் அல்ல என்று உள்துறை அமைச்சு சட்டத்துறை அலுவலகத்திடம் கூறியுள்ளது என்றும் அவர் கூறினார்.