போலீசார் ஈப்போ உயர் நீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி இந்திரா காந்தியின் மகளை அவரிடமே கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) மூசா ஹசான் கூறியுள்ளார்.
போலீஸ் பிரசன்னா திக்ஷாவை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றும் தவறினால் ஏன் செய்யவில்லை என்ற காரணத்தை உறுதிமொழி ஆவணத்தின் மூலமாக நீதிமன்றத்தில் விளக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“போலீஸ் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றத்தான் வேண்டும் வேறு வழியில்லை”, என மூசா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அதே வேளையில் போலீசின் நிலையும் சிக்கலானதுதான். ஷியாரியா நீதிமன்றம் குழந்தைப் பராமரிப்பு உரிமையை மதமாறிய தந்தைக்கும் பின்னர் சிவில் நீதிமன்றம் அதே உரிமையைத் தாயாருக்கும் கொடுத்ததுதான் இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்றாரவர்.
முன்னாள் igp அவர்களே ,நீங்களே காலித்துக்கு நேரடியாக
சொல்லுங்கள்,உங்களுக்கு கோடி புண்ணியம்.
கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரமோ முன்னாள் ஐஜிபி ஐயா? நீங்கள் கடமையில் இருந்த காலத்தில் எப்படி இருந்தீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா?
என்ன சிக்கல் .. சிவில் முறைப்படி விவாகரத்து அதனுடன் சிவில் கோர்ட் உத்தரவின் படி குழைந்தைகள் பராமரிப்பு … தகப்பன் மதமாறி எப்படி இந்து தாயிக்கு பிறந்த குழந்தைகளை தாயின் அனுமதியின்றும் சிவில் கோர்ட் அனுமதி பெறாமல் மதமாற்றம் செய்யமுடியும் … உனக்கு தான் தாலிகட்டிய மனைவி வேண்டாம் என்று போய் விட்டாயே …. பிள்ளைகள் மேல் பாசம் அக்கறை இருந்தால் மதமாறி சித்திரவதை செய்வான …… மா…. கெட்டவன் தாயிக்குபின் தாரம் என்பதை உணரா மடையன்கள் செய்யும் மாபெரும் தவற்றினால் சமுதாயமே தலைகுனிய வேண்டியாகிறது …. தடுக்க ஒரே வழி சட்டபூர்வ திருமண பதிவின் பொழுது எழுத்துபூர்வமாக எழுதிவாங்கிக்கொள்ளவேண்டும் …
விவாகரத்து என்று வந்தால் குழந்தைகளை தாயிடமிருந்து பிரிக்க மாட்டேன் என்று !
“முன்னாள்” ஆகிவிட்டாலே எல்லாரும் உண்மையாக நடந்து கொள்ளுகிறார்கள். யாராக இருந்தாலும் “இந்நாள்” தான் பிரச்சனை!
முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் (ஐஜிபி) மூசா ஹசான் அவர்களே, இந்த நாட்டில் மட்டும் சிவில் நீதிமன்றம் ஒருவருக்கும் ஷியாரியா நீதிமன்றம் ஒருவருக்கும் தனித்தனியாக தீர்ப்பளிக்கிறது. முதலில் நீதிமன்றத்தையும் உங்கள் சட்டத்திட்டங்களை சரி செய்யுங்கள். ஒரு நாட்டில் இரு வெவ்வேறு நீதிமன்றங்கள். முட்டாள்தனமாக அல்லவா இருக்கிறது.
மலேசிய போலிஸ் அம்னோவின் அடுப்பங்கரை ! அம்னோ தொலைந்தால் எல்லாம் சரியாகிவிடும் !
லஞ்சம் கொடுங்கள் உடனே வேலை செய்வான் மலேசியா போலிஸ்
ஒருவர் நாலவரை திருமணம் செய்து கொள்ளலாம் …. ஒரு நாட்டில் இருவகையான நீதி மன்றங்கள் அமைத்து கொள்ளலாம் ,,, இதுதான் இவர்களின் ம ,,,,,,,,,,,, ஒரு பெண் நான்கு ஆடவரை திருமணம் செய்தும் கொள்ளலாம் …. நல்ல ம ………..
இந்த விஷயத்தில் எந்த சிக்கலும் இல்லை. போலீஸ் தனது கடமையை செய்யவில்லை அவ்வளவுதான். 2009ம் ஆண்டு ஷாரியா நீதிமன்றம் ரிடுவானுக்கு பிள்ளையை பாதுகாக்கும் அதிகாரம் கொடுத்தது. இப்போது உயர் நீதிமன்றம் ‘அதனை’ ரத்து செய்து குழந்தையை ரிடுவானிடமிருந்து எடுத்து திருமதி இந்திரா காந்தியிடம் ஒப்படைக்க ஆணைப் பிறப்பித்துள்ளது. ஆனால் போலீஸ் அதைச் செய்ய மறுக்கிறது. சட்டத்தை மதிக்காமல் போலீஸ் தவறு செய்கிறது என்பது வெள்ளிடைமலை. தவற்றுக்கு பொறுப்பேற்று தலைமை போலீஸ் அதிகாரி காலித் பதவி விலகவேண்டும் என்பதே கோரிக்கை. சட்டத்திற்கு எதிராக செயல்படும் அவர் கைது செய்யப்படவேண்டும் என்பதும் ஒரு சிலரது கோரிக்கை. ஒரு வேடிக்கை என்னவென்றால், இவர் கைது செய்யப்பட்டால் வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லும். எந்த நீதிமன்றத்திற்கு போகப் போகிறார்?. இவர் தான் எந்த நீதியையும் மதிக்காதவராயிற்றே!.